List of active policies

Name Type User consent
Participation in the project agreement Other policy Authenticated users
Research data agreement Other policy Authenticated users
Materials and data sharing agreement Other policy Authenticated users
Access to data agreement Other policy Authenticated users
Complaints and requests agreement Other policy Authenticated users
வலைத்தள அந்தரங்கக் கொள்கை Privacy policy Authenticated users

Summary

உங்களது பங்குபற்றல் சுய விருப்பிலானது, எக்காரணத்தையும் வழங்காமலும் மோசமான பின்விளைவுகள் எவையும் இல்லாமலும் எந்நேரத்திலும் விலகிக் கொள்ளும் சுதந்திரம் உங்களுக்குண்டு.

Full policy

 


Summary

நேர்காணல்களின் போதும் அவதானிப்பு அமர்வுகளின் போதும் ஒருமுகப்படுத்தற் குழுக்களிலும், அல்லது கருத்துக் கணிப்புக்களால் சேகரிக்கப்படும் தரவுகள் இம்முன்னோடியாக்கற் கட்டத்தின் போது செயற்றிட்டத்திற் கலந்து கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு அணுகக் கிடைக்கும். அப்பொருட்களை அணுக இவர்களுக்கு அனுமதியளிக்குமாறு நாம் உங்களிடம் விநயமாக வேண்டிக் கொள்கிறோம்.

Full policy

 


Summary

The materials and the data you will upload on the digital platform will be accessible to those researchers, practitioners, volunteer workers and parents taking part in the project during this piloting phase. We kindly ask you to give permission for these individuals to access those materials through the platform, and to commit to not sharing data from other participants (i.e., forum posts, shared images) on external platforms.

Full policy

 


Summary

வழங்கப்படும் தனிப்பட்ட தரவுகளுக்கு ஆராய்ச்சியாளர்களுக்கு அணுக்கம் இருக்கும், அவை மிலானோ பிக்கோக்கா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாகக் களஞ்சியப்படுத்தப்படுவதுடன் செயற்றிட்டத்தின் முடிவில் முற்றாக அநாமதேயமாக்கப்படும். தரவுகள் பிரசுரங்களுக்குப் பயன்படுத்தப்படும், ஆயினும் உங்களை அடையாளங் காண முடியாதவாறு கையாளப்படும். நீங்கள் இதை விளங்கிக் கொண்டீர்கள் என்பதை உறுதிப்படுத்துமாறு நாம் உங்களிடம் வேண்டிக் கொள்கிறோம்.

Full policy

 


Summary

செயல் மேடையினுள் உங்களது தனிப்பட்ட ஆட்குறிப்புப் பக்கத்துக்குச் செல்வதன் மூலம், அல்லது privacy@isotis.org இற்கு எழுதுவதன் மூலம், அல்லது உங்களது நாட்டுக்கு தரவு முகாமைத்துவத்துக்குப் பொறுப்பானவரைத் தொடர்பு கொள்வதன் மூலம் நீங்கள் ஒரு கவலையை வெளிப்படுத்த அல்லது ஒரு முறைப்பாட்டைச் செய்ய இயலுமாகும். இத்தாலிக்கு:

அந்திரெயா மங்கியாட்டோர்டி

andrea.mangiatordi@unimib.it

மிலானோ பிக்கோக்கா பல்கலைக்கழகம்

Piazza dell’Ateneo Nuovo, 1

20126 Milano

தொ.பே. 0039 02 64484923

தரவு முறைப்படுத்துபவர் இத்தாலியிலுள்ள மிலானோ பிக்கோக்கா பல்கலைக்கழகம் ஆவதுடன், பிரதான தொடர்பாளர் கலாநிதி அந்திரெயா மங்கியாட்டோர்டி ஆவார். ஒவ்வொரு பங்காளர் நிறுவனமும் தனது சொந்த நாட்டில் சேகரிக்கப்படும் தரவுகளுக்கான ஒரு கட்டுப்பாட்டாளராவதுடன், அந்நாடுகளுக்கான தொடர்பாளர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்:

Universiteit Utrecht: Paul Leseman (P.P.M.Leseman@uu.nl); அத்துடன் தரவுப் பாதுகாப்பு அலுவலர் Artan Jacquet (R.A.Jacquet@uu.nl).

Hellenic Open University: Konstantinos Petrogiannis (kpetrogiannis@eap.gr); அத்துடன் தரவுப் பாதுகாப்பு அலுவலர் (dpo@eap.gr).

Masarykova University: Karel Pančocha (pancocha@ped.muni.cz).

Paris XII Val De Marne University: Jacques-Olivier Adam (jacques-olivier.adam@u-pec.fr)

International Step By Step Association: Ning Alfrink (nalfrink@issa.nl).

Full policy



Summary


இவ்வலைத்தளம் ISOTIS செயற்றிட்டத்தால் நடத்தப்படுவதுடன், இத்தாலியிலுள்ள மிலானோ பிக்கோக்கா பல்கலைக்கழகத்தால் ஏற்பளிக்கவும் பராமரிக்கவும் கட்டுப்படுத்தவும் படுகிறது. நாம் உங்களது அந்தரங்கத்தை மிகக் கடுமையானதாக எடுத்துக் கொள்கிறோம், எனவே இது பின்வருவனவற்றைப் பற்றிய முக்கிய தகவல்களைக் கொண்டிருப்பதால் இவ் அந்தரங்கக் கொள்கையை மிகக் கவனமாக வாசிக்குமாறு நாம் உங்களைத் தூண்டுகிறோம்: 

  • நாம் யார்,
  • நாம் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும், களஞ்சியப்படுத்தும், பயன்படுத்தும், பகிரும் முறைகளும் காரணங்களும்,
  • உங்களது தனிப்பட்ட தகவல்களுடன் தொடர்பான உங்களது உரிமைகள்,
  • உங்களிடம் ஒரு முறைப்பாடு இருக்குமிடத்து, எங்களையும் மேற்பார்வை அதிகாரிகளையும் தொடர்பு கொள்ளும் முறை.

எமது வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இவ் அந்தரங்கக் கொள்கையின் நிபந்தனைகளுக்கு இணங்குகிறீர்கள்.



Full policy

நாம் யார்

ISOTIS செயற்றிட்டத்தின் பங்காளர்கள் ('நாம்' அல்லது 'எமக்கு', http://www.isotis.org/consortium/partner-institutions/ இற் பட்டியலிடப்பட்டுள்ளோர்) உங்களைப் பற்றிய சில தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கவும் பயன்படுத்தவும் செய்வதுடன் அவற்றுக்குப் பொறுப்பாளிகளாவர். தரவுக் கட்டுப்பாட்டாளர் இத்தாலியிலுள்ள மிலானோ பிக்கோக்கா பல்கலைக்கழகம் ஆவதுடன், பிரதான தொடர்பாளர் கலாநிதி அந்திரெயா மங்கியாட்டோர்டி ஆவார். நாம் (ஐக்கிய இராச்சியம் உட்பட) ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் பொருந்தும் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குறுத்தல்கள் (EU) 2016/679 என்பதன் கீழ் ஒழுங்குறுத்தப்படுவதுடன்,அச்சட்டங்களின் நோக்கங்களுக்காக தனிப்பட்ட தகவல்களின் ஒரு 'கட்டுப்பாட்டாளர்' என்ற வகையில் நாம் பொறுப்பாவோம்.


நாம் சேகரிக்கவும் பயன்படுத்தவும் செய்யும் தனிப்பட்ட தகவல்கள் யாவை

அ) நீங்கள் எமக்கு வழங்கும் தனிப்பட்ட தகவல்கள்

நீங்கள் எமது வலைத்தளத்தில் உங்களது தனிப்பட்ட கணக்கை உருவாக்கும போது, அல்லது நீங்கள் வலைத்தளத்திற் கல்விச் செயற்பாடுகளிற் கலந்து கொள்ளும் போது, நீங்கள் எமக்கு பின்வரும் தகவல்களை வழங்குகிறீர்கள்:

  • நீங்கள் வயதுவந்த ஒரு பங்குபற்றுநராக இருந்தால் (ஒரு பெற்றோர் அல்லது ஓர் ஆசிரியர்): உங்களது பெயர் (கட்டாயமல்ல), உங்களது மின்னஞ்சல் முகவரி, நீங்கள் வசிக்கும் நாடு
  • நீங்கள் ஒரு மாணவரைப் பிரதிநிதித்துவம் செய்வதாயின் (ஒரு பெற்றோராக, சட்டப்படி பாதுகாவலராக அல்லது ஏனைய பொறுப்பு வாய்ந்த ஆளாக): மாணவர் வசிக்கும் நாடு

இத்தகைய தகவல்கள் பின்வரும் காரணங்களுக்காகச் சேகரிக்கப்படுகின்றன:

பெயர்: எங்களால் அல்லது ஏனைய பாவனையாளர்களால் அடையாளங் காணப்பட
நாடு: ஆராய்ச்சி நோக்கங்களுக்காக
மின்னஞ்சல் (நீங்கள் வயதுவந்த ஒரு பங்குபற்றுநராக இருந்தால் மாத்திரம்): தொடர்பாடல் நோக்கங்களுக்காக அல்லது உங்களது கணக்கின் பராமரிப்புக்காக (அஃதாவது, கடவுச்சொல்லைத் திரும்பப் பெறுவதற்காக)
பணி (ஆசிரியர், பெற்றார்…): ஆராய்ச்சி நோக்கங்களுக்காகவும் செயல் மேடையினுள் முறையான குழுக்களுக்கு ஒதுக்கப்படவும்

உங்களிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கும் போது, நீங்கள் எமக்கு தகவல்களை வழங்க வேண்டியிருக்குமா என்பதைப் பற்றி நாம் உங்களுக்கு அறிவிப்போம்.

நாம் இத்தகவல்களைச் சேகரிக்கும் வேளைகளுக்கான சில உதாரணங்களில் உள்ளடங்குவன:

  • உங்களது தனிப்பட்ட கணக்கின் உருவாக்கம்
  • கல்விச் செயற்பாடுகளிற் கலந்து கொள்ளும் போது


ஆ) உணர்வுபூர்வமான தனிப்பட்ட தகவல்கள்

உணர்வுபூர்வமான தனிப்பட்ட தகவல்களில் பின்வருவனவற்றுடன் தொடர்பான எத்தகவல்களும் உள்ளடங்குகின்றன (இங்கு முன்மொழியப்படும் செயற்பாடுகளில் உள்ளடங்கக்கூடிய தகவல்களுக்கான உதாரணங்கள்):

உங்களது தோற்ற இனம்
உங்களது சமய நம்பிக்கைகள்
உங்களது உடல் அல்லது உளச் சுகாதாரம் அல்லது நிலைமை
உங்களது பாலியல் நாட்டம்

வலைத்தளத்தில் உங்களது பதிவின் போது உணர்வுபூர்வமான தகவல் எதுவும் நேரடியாகக் கேட்கப்பட மாட்டாது. ஆயினும் நீங்கள் செயல் மேடையில் கலந்துரையாடல்களில் அல்லது செயற்பாடுகளிற் கலந்து கொள்ளும் போது சில உணர்வுபூர்வமான தகவல்கள் சேகரிக்கப்படலாம். இதில் உங்களது தோற்ற இனங்கள், உங்களது சமய நம்பிக்கைகள் அல்லது உங்களது உடல் அல்லது உளச் சுகாதாரமும் நிலைமையும் போன்றன உள்ளடங்குகின்றன. நாம் இத்தகவல்களை ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மாத்திரம் சேகரிக்கிறோம்.

செயற்பாடுகளில் உணர்வுபூர்வமான தனிப்பட்ட தகவல்கள் உள்ளடங்கக்கூடிய நிலைமைகளுக்கான உதாரணங்களாவன:

  • தமது சாதாரண நாளை, தமது வீட்டுச் சூழலையும் தமது குடும்பங்களையும், தாம் மதிக்கும் பண்பாடுகளைப் பற்றி கலந்து கொள்வோரிடம் கேட்கப்படலாம்: இது மேலே பட்டியலிடப்பட்ட தரவுகளிற் சிலவற்றை உய்த்தறிய வழி செய்யலாம்;
  • வரைதல்களைத் தரவேற்றுமாறு சிறுவர்களிடம் கேட்கப்படலாம், அது உடல் அல்லது புத்திக் கோளாறு நிலைமைகளை வெளிப்படுத்தலாம்.

நாம் உங்களது தனிப்பட்ட தகவல்களை எப்படிப் பயன்படுத்துகிறோம்

நாம் பின்வரும் நோக்கங்களுக்காக எமது பாவனையாளர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கிறோம்:

  • செயல் மேடையினுள் உங்களது செயற்பாட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்தல், முன்மொழியப்படும் செயற்பாடுகள் வினைத்திறனானவையா, விளங்கிக் கொள்ளக்கூடியனவா, சிந்தனையைத் தூண்டுவனவா என்பதை மதிப்பிட;
  • மாநாடுகளில் சமர்ப்பிக்கப்படுபவை உட்பட அறிக்கையிடலும் விஞ்ஞான எழுத்தாக்கமும்; கல்விப் பிரசுரங்கள் யாவும் ISOTIS வலைத்தளத்தில் (www.isotis.org) பட்டியலிடப்படும்.



தரவுகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே அனுப்பப்பட மாட்டா, எந்த மூன்றாந் தரப்பும் உங்களது தனிப்பட்ட தகவல்களை அணுக மாட்டாது. உங்களது தரவுகள் தன்னியக்கத் தீர்மானித்தல் தொகுதிகளில் உள்ளிடப் பயன்படுத்தப்பட மாட்டா (அஃதாவது உங்களது நடத்தையின் அடிப்படையில் மேலதிக உள்ளடக்கம் அல்லது சேவைகள் பற்றிய பரிந்துரை எதுவும் இருக்க மாட்டாது).


தனிப்பட் தகவல்களை வழங்குமாறு நாம் உங்களிடம் கேட்போமா என்பதும், அவ்வாறாயின் ஏன் என்பதும்

உங்களிடமிருந்து பின்வரும் தகவல்களுக்கான ஏற்பாடு அவசியமாகும்:

நீங்கள் வயதுவந்த ஒரு பங்குபற்றுநராக இருந்தால் (ஒரு பெற்றோர் அல்லது ஓர் ஆசிரியர்): பெயர் (கட்டாயமல்ல), மின்னஞ்சல் முகவரி, நாடு, பணி (பெற்றார் அல்லது ஆசிரியர்)

நீங்கள் ஒரு மாணவரைப் பிரதிநிதித்துவம் செய்வதாயின் (ஒரு பெற்றோராக அல்லது ஏனைய பொறுப்பு வாய்ந்த ஆளாக): மாணவரின் நாடு

இது பின்வருவனவற்றைச் செய்ய எமக்கு வழி செய்வதற்காகும்:

பெயர்: எங்களால் அல்லது ஏனைய பாவனையாளர்களால் அடையாளங் காணப்பட (உதாரணமாக ஆசிரியர், வேறு மாணவர்)
நாடு: ஆராய்ச்சி நோக்கங்களுக்காக
மின்னஞ்சல் (நீங்கள் வயதுவந்த ஒரு பங்குபற்றுநராக இருந்தால் மாத்திரம்): தொடர்பாடல் நோக்கங்களுக்காக அல்லது உங்களது கணக்கின் பராமரிப்புக்காக (அஃதாவது, கடவுச்சொல்லைத் திரும்பப் பெறுவதற்காக)
பணி (ஆசிரியர், பெற்றார்…): ஆராய்ச்சி நோக்கங்களுக்காகவும் செயல் மேடையினுள் முறையான குழுக்களுக்கு ஒதுக்கப்படவும்

உங்களிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கும் போது, நீங்கள் எமக்கு தகவல்களை வழங்க வேண்டியிருக்குமா என்பதைப் பற்றி நாம் உங்களுக்கு அறிவிப்போம்.


உங்களது தனிப்பட்ட தகவல்கள் எவ்வளவு காலம் வைத்திருக்கப்படும்

நாம் உங்களது தனிப்பட்ட தகவல்களை பின்வரும் காலப் பகுதிகளுக்கு வைத்திருப்போம்:

முறைப்படுத்தப்படாத தரவுகள், அஃதாவது வலைத்தளப் பாவனையாளர்களிடமிரு்நது சேகரிக்கப்பட்ட இன்னமும் முறைப்படுத்தப்பட்டிராத தரவுகள் இத்தாலியிலுள்ள மிலானோ பிக்கோக்கா பல்கலைக்கழகத்திலுள்ள பாதுகாப்பான வழங்கிக் கணனிகளிற் சேகரிக்கப்படுவதுடன், அவை ஒரு புனைப்பெயராக்கச் செயன்முறைக்கு ஆட்படும். இச்செயன்முறையில், தரவுகள் விபரிக்கும் ஆட்கள் அநாமதேயமாக இருப்பதற்காக தனிப்பட்ட முறையில் அடையாளங் காணப்படக்கூடிய தகவல்களை நாம் அகற்றுவோம் அல்லது குறியாக்கம் செய்வோம். அநாமதேயமாக்கற் செயன்முறை கூடிய விரைவில் நடைபெறுவதுடன் முறைப்படுத்தப்படாத தரவுகள் இத்தாலியிலுள்ள மிலானோ பிக்கோக்கா பல்கலைக்கழகத்தில் செயற்றிட்ட முடிவின் பின்னர் கூடிய பட்சம் ஆறு மாதங்களுக்கு வைத்திருக்கப்படுவதுடன், அதன் பின்னர் அழிக்கப்படும். அநாமதேயமாக்கப்பட்ட ஆராய்ச்சித் தரவுகள் (அடையாளங் காணப்படக்கூடிய தகவல் எதுவுமின்றி) நெதர்லாந்திலுள்ள உற்றெசுட்டுப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பான வழங்கிக் கணனிகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு 10 ஆண்டு காலத்துக்கு வைத்திருக்கப்படும்.

தரவுகளைக் களஞ்சியப்படுத்துவதற்கான காலப் பகுதிகள் ஆராய்ச்சி நோக்கங்களுக்கு அவசியமானவற்றை விட நீண்டவையாக மாட்டா.


நாம் உங்களது தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கவும் பயன்படுத்தவும் முடிவதற்கான காரணங்கள்

நாம் உங்களது தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கவும் பயன்படுத்தவும் செய்யும் சட்ட அடிப்படையாக நாம் ஒரு இசைவுப் படிவத்தில் தங்கியிருக்கிறோம்.

நாம் உங்களது உணர்வுபூர்வமான தகவல்களை முறைப்படுத்துவதற்கான அடிப்படை (அஃதாவது GDPR இல் உள்ளவாறு விசேட வகை) செயற்றிட்டத்தினால் உருவாக்கப்படும் ஆராய்ச்சிக் கண்டறிதல்களின் செல்லுபடியாதலை வெளிக்காட்ட முறைப்படுத்துதல் அவசியமாவதாகும்.


உங்களது தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்

தனிப்பட்ட தகவல்கள் தற்செயலாகக் காணாமற் போதலை அல்லது அனுமதிக்கப்படாத ஒரு வழியில் பயன்படுத்த அல்லது அணுகப்படுவதைத் தடுக்க எம்மிடம் பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் காணப்படுகின்றன. நாம் உங்களது தனிப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கான நியாயமான தேவை இருப்போருக்கென மாத்திரம் அவற்றுக்கான அணுகலை மட்டுப்படுத்துகிறோம். உங்களது தகவல்களை முறைப்படுத்துவோர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட முறையில் அவ்வாறு செய்வதுடன் இரகசியம் பேணல் கடப்பாட்டுக்கு ஆட்படுகின்றனர்.

நாம் உங்களது தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க தொழினுட்ப, நிறுவன நடவடிக்கைகளையும் பயன்படுத்துவோம். இந்நடவடிக்கைகளில் பின்வரும் உதாரணங்கள் உள்ளடங்கலாம்:

பாவனையாளர் கணக்கு அணுகல் ஒரு தனித்துவமான பாவனையாளர் பெயராலும் கடவுச்சொல்லாலும் கட்டுப்படுத்தப்படுகிறது; தரவுகள் யாவும் பாதுகாப்பான வழங்கிக் கணனிகளிற் சேமிக்கப்படுகின்றன; கடவுச்சொற்கள் ஒரு குறிமுறையாக்கப்பட்ட வடிவத்திற் சேமிக்கப்படுகின்றன; தமது முதலாவது உள் நுழைவின் பின்னர் ஒரு தனிப்பயன் கடவுச்சொல்லை அமைக்குமாறு பாவனையாளர்களிடம் கேட்கப்படுகிறது.

தரவுப் பாதுகாப்பு மீறல் எனச் சந்தேகிக்கப்படும் எதனையும் கையாள்வதற்கான செயன்முறைகளும் எம்மிடமுள்ளன. நாம் உங்களுக்கு அறிவிப்பது சட்டப்படி தேவைப்படுமிடத்து ஒரு தரவுப் பாதுகாப்பு மீறல் எனச் சந்தேகிக்கப்படுவதைப் பற்றியும் பொருத்தமான ஏதேனும் ஒழுங்குறுத்தியைப் பற்றியும் உங்களுக்கு அறிவிப்போம்.

நிச்சயமாக, நாம் உங்களது தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க நியாயமான முயற்சிகள் யாவையும் செய்கின்ற அதே வேளை, வலைத் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இணையத்தைப் பயன்படுத்துவது முழுமையாகப் பாதுகாப்பானதல்ல என்பதை நீங்கள் உறுதிப்படுத்துகின்ற அதே வேளை, இக்காரணத்துக்காக உங்களிடமிருந்து அல்லது உங்களுக்கு இணையவழியாக அனுப்பப்படும் ஏதேனும் தனிப்பட்ட தரவின் பாதுகாப்புக்கு அல்லது நேர்மைக்கு நாம் உத்தரவாதமளிக்கவியலாது. உங்களது தகவல்களைப் பற்றி உங்களிடம் எவையேனும் குறிப்பான கவலைகள் இருந்தால், பின்வரும் விபரங்களைப் பயன்படுத்தி எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.


சிறுவர்களும் இசைவின் செல்லுபடியாதலும்

நாம் எவரேனும் பாவனையாளரிடமிருந்து இசைவு பெறுமிடத்து, பாவனையாளர் 16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ளவரா, இசைவு வழங்குவதற்காக சிறுவர் போதியளவு அறிவுறுத்தப்பட்டுள்ளாரா என்பவற்றை உறுதிப்படுத்த நியாயமான படிமுறைகளை மேற்கொள்வோம். பாவனையாளர் 16 வயதை விடக் குறைந்தவராயின், ஏதேனும் தனிப்பட்ட தகவலை முறைப்படுத்த பெற்றோரின் இசைவு தேவைப்படும்.

சிறுவர்கள் உட்பட ஒவ்வொரு பாவனையாளரும் ஒரு தனித்துவமான பாவனையாளர் பெயரையும் கடவுச்சொல்லையும் கொண்டிருப்பார். பாவனையாளர் பெயர்களுடன் தொடர்பான கடவுச்சொற்கள் தொடக்கத்தில் செயல் மேடை நிருவாகிகளால் அமைக்கப்படும் அல்லது எழுமாறாக உருவாக்கப்படும். பாவனையாளர்கள் தமது முதலாவது அணுகலின் போது அவற்றை மாற்ற வேண்டியிருக்கும். அந்தரங்கம் பற்றிய காரணங்களுக்காக, கடவுச்சொற்கள் VLE தரவுத்தளத்தில் ஒரு குறிமுறையாக்கப்பட்ட வடிவத்தில் சேமிக்கப்படும், எனவே ISOTIS செயற்றிட்டத்தின் ஆராய்ச்சியாளர்களுக்கோ செயல் மேடை நிருவாகிகளுக்கோ அவற்றை வாசிப்பதற்கான இயலுமை இருக்காது, ஒரு பாவனையாளரின் வேண்டுகோளின் பேரில் அவற்றை மீளமைக்க மாத்திரமே இயலுமாகும். பாவனையாளர்களால் தன்னாட்சியுடன் முகாமை செய்யப்படக்கூடிய கடவுச்சொல் மீளமைப்புச் செயன்முறை பாவனையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு விசேட தொடுப்பை அனுப்புவதைக் கொண்டிருக்கும். ஒரு மின்னஞ்சலுடன் தொடர்பான பல கணக்குகளை உருவாக்குமிடத்து, அம்மின்னஞ்சலை அணுக அங்கீகரிக்கப்பட்டுள்ளவருக்கு (பொதுவாக ஓர் ஆசிரியருக்கு) கடவுச்சொல் மீளமைப்புச் செயன்முறையை முகாமை செய்யக்கூடியதாக இருக்கும். ஒரு தனியாளால் முகாமை செய்யப்படும் கணக்குகளைப் பொறுத்தவரையில் பாவனையாளர் பெயர், கடவுச்சொல் ஆகிய இரண்டையும் உண்மையிலேயே அறிந்திருப்பவர் இறுதியான கணக்கு உரிமையாளர் மாத்திரமே என்பதை நாம் உறுதிப்படுத்துவோம். மேலே குறிப்பிட்டவாறு, முன்னர் தொடர்பாடல் செய்யப்பட்ட கடவுச்சொற்கள் பயனற்றுப் போவதற்காக, ஒவ்வொரு பாவனையாளரும், வயதுவந்தோரும் அல்லது சிறுவரும் முதல் தடவை செயல் மேடைக்கு அங்கீகரிக்கப்பட்ட அணுகலின் பின்னர் உடனடியாக ஒரு புதிய கடவுச்சொல்லைத் தெரிவு செய்யுமாறு கேட்கப்படுவார்.


உங்களுக்கு இருக்கும் உரிமைகள் யாவை?

பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குறுத்தலின் கீழ் உங்களுக்கு முக்கியமான உரிமைகள் பல இலவசமாகக் கிடைக்கின்றன. சுருக்கமாக, அவற்றில் உள்ளடங்கும் உரிமைகளாவன:

  • நீங்கள் உங்களது தகவல்கள் இனிமேலும் எமது வழங்கிக் கணனிகளில் சேமிக்கப்பட விரும்பாவிடின் எந்நேரத்திலாயினும் தெரிவு செய்து விலகுதல்
  • தகவல்களை நேர்மையாக முறைப்படுத்துவதும் நாம் உங்களது தனிப்பட்ட தகவல்களை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் ஒளிவு மறைவின்மையும்
  • உங்களது தனிப்பட்ட தகவல்களையும், இவ் அந்தரங்க அறிவித்தல் கவனிப்பதற்கென ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட ஏனைய சில மிகை நிரப்புத் தகவல்களையும் அணுகுதல்
  • நாம் வைத்திருக்கும் உங்களது தகவல்களிலுள்ள எவையேனும் பிழைகளைத் திருத்த எம்மை வேண்டுதல்
  • சிற்சில நிலைமைகளில் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை அழிப்பதை வேண்டுதல்
  • நீங்கள் எமக்கு வழங்கியுள்ள உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை ஒரு கட்டமைக்கப்பட்ட, பொதுவாகப் பயன்படுத்தப்படும், எளிதிற் கொண்டு செல்லக்கூடிய வகையில் பெறுதல்.
  • வேறு சில நிலைமைகளில் உங்களது தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்கம் செய்வதை நாம் தொடர்வதை எதிர்த்தல்
  • சிற்சில நிலைமைகளில் உங்களது தனிப்பட்ட தகவல்களின் செயலாக்கத்தை வேறு விதமாக மட்டுறுத்தல்
  • எம்மால் எவையேனும் தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் மீறப்படுவதனால் ஏற்படும் சேதங்களுக்காக இழப்பீடு கோரல்

அவை பொருந்தும் சூழ்நிலைகள் உட்பட அவ்வுரிமைகளில் ஒவ்வொன்றையும் பற்றிய மேலதிகத் தகவல்களுக்காக, பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குறுத்தல்களின் கீழ் ஆளின் உரிமைகளைப் பற்றிய ஐக்கிய இராச்சிய தகவல் ஆணையாளரின் அலுவலகத்திலிருந்து (ICO) பெறப்படும் வழிகாட்டலைப் பாருங்கள் (http://ico.org.uk/for-organisations/guide-to-the-general-data-protection-regulation-gdpr/individual-rights/)

நீங்கள் அவ்வுரிமைகளில் எதையேனும் மேற்கொள்ள விரும்பினால்:

  • எமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்
  • வேண்டுகோளை அனுப்புவது நீங்களேயன்றி வேறெவருமல்ல என்பதை உறுதிப்படுத்த, எமக்கு போதிய தகவல்களைப் பெற உதவுங்கள் (பாவனையாளர் பெயரும் தொடர்புள்ள மின்னஞ்சலும்)
  • உங்களது வேண்டுகோளுடன் தொடர்பான தகவல்களை எமக்கு அறிவியுங்கள்

உங்களுக்கு மேலதிக உதவி தேவையா?

நீங்கள் இக்கொள்கையை மற்றொரு வடிவத்திற் பெற விரும்பினால் (உதாரணமாக: ஒலி, பெரிய அச்சு, பிறைலி), கீழுள்ள மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.

முறையிடுவது எவ்வாறு

நாம் உங்களது தகவல்களைப் பயன்படுத்துவதைப் பற்றி நீங்கள் எழுப்பும் எக்கேள்வியையும் அல்லது கவலையையும் எம்மால் தீர்த்து வைக்க முடியுமென நாம் நம்புகிறோம்.

பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குறுத்தல் ஒரு மேற்பார்வை அதிகாரியிடம், குறிப்பாக நீங்கள் வேலை செய்யும், சாதாரணமாக வசிக்கும் அல்லது தரவுப் பாதுகாப்புச் சட்ட மீறல் எதுவும் நிகழ்ந்ததாகக் குற்றஞ் சாட்டப்படும் ஐரோப்பிய ஒன்றிய (அல்லது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி) நாட்டில் ஒரு முறைப்பாட்டைச் செய்யும் உரிமையையும் உங்களுக்கு வழங்குகிறது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள மேற்பார்வை அதிகாரி https://ico.org.uk/concerns/ இல் அல்லது தொலைபேசி மூலம் 0303 123 1113 இல் தொடர்பு கொள்ளக்கூடிய தகவல் ஆணையாளர் ஆவார்.



அந்தரங்கக் கொள்கைக்கான மாற்றங்கள்

இவ் அந்தரங்கக் கொள்கை 2018/05/30அன்று பிரசுரிக்கப்பட்டதுடன்2018/05/30 அன்று இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது.

நாம் இவ் அந்தரங்கக் கொள்கையை காலத்துக்குக் காலம் மாற்றக் கூடும். எம்மாற்றங்களையும் பற்றி (நீங்கள் மின்னஞ்சல்களைப் பெறத் தெரிவு செய்து உட்பட்டிருந்தால்) மின்னஞ்சல் மூலம்; வலைத்தளத் தலைப்பில் ஓர் அறிவித்தலின் மூலம்; வலைத்தளத்தின் செய்திப் பிரிவில் ஓர் அறிவித்தலின் மூலம் எல்லாப் பாவனையாளர்களுக்கும் அறிவிப்போம்.


எம்மைத் தொடர்பு கொள்ளல்

இக்கொள்கையை அல்லது நாம் உங்களைப் பற்றி வைத்திருக்கும் தகவல்களைப் பற்றி உங்களிடம் எவையேனும் கேள்விகள் இருந்தால், பின்வருமாறு எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்:

மின்னஞ்சல்:privacy@isotis.org

பிரதான தொடர்பாளர் Dr. Andrea Mangiatordi, அவரது அமைவிடம் University of Milano-Bicocca, piazza dell’Ateneo Nuovo 1, 20126 Milan - Italy.