1 - Two languages are better than one!

                                   

பாப்லோ ஓர் எசுப்பானியன், இலண்டனில் வசிக்கிறான். ஒவ்வொரு நாளும் அவன் பாடசாலையிலிருந்து வெளியேறும் போது, அவன் தன் தாயை எசுப்பானிய மொழியில் வாழ்த்துகிறான், தன் வகுப்புத் தோழர்களுக்கு ஆங்கிலத்தில் குட் பை சொல்கிறான்.
பாப்லோ: ஹை (எசுப்பானியத்தில்). ஹாய் (ஆங்கிலத்தில்)
பாப்லோ இரு மொழியன்.
பாப்லோவால் ஒரே நேரத்தில் இரு மொழிகளைக் கற்றுக் கொள்ள இயலாமற் போகுமோவென பாப்லோவின் தாயும் அவனது ஆசிரியரும் பயப்படுகின்றனர்.
ஆசிரியரும் தாயும்: அவன் இரு மொழிகளையும் முறையாகக் கற்பானா?
அண்மைக் காலம் வரை, இரு மொழிப் புலமை சிறுவர்களின் அபிவிருத்தியின் வேகத்தைக் குறைக்கிறதெனக் கருதப்பட்டது. இரு மொழிப் பிள்ளைகளுக்கு தமது இரு மொழிகளுக்கும் இடையில் வித்தியாசம் காண முடியுமென இப்போது விஞ்ஞான அடிப்படையில் எண்பிக்கப்பட்டுள்ளது. 
பாப்லோவுக்கு அதீத திறமைகள் ஏராளமுண்டு! அவன் யாருடன் பேசுகிறான் என்பதைப் பொறுத்து அவனால் எளிதாக எசுப்பானியத்துக்கும் ஆங்கிலத்துக்கும் இடையில் மாறிக் கொள்ள முடியும். தந்தை: உணக்கு அது வேண்டுமா? (எசுப்பானியத்தில்)பாப்லோ: ஆம் (எசுப்பானியத்தில்). பெட்றோ, உனக்கு? (ஆங்கிலத்தில்)பெட்றோ: ஆம் (ஆங்கிலத்தில்)
அவனால் இரு மொழிகளில் தொடர்பாட முடிவது மாத்திரமன்றி, தொடர்பற்ற தகவல்களால் கவனஞ் சிதறாமல் அவனது கவனத்தை ஒருமுகப்படுத்துவதிலும் கூட அவன் உள்ளத்தால் இசைந்து கொடுப்பவன்.
பாப்லோவைப் போன்றே, அவர்கள் எவ்விரு மொழிகளைப் பேசுகிறார்கள் என்ற பாகுபாடின்றி முகம்மது, சுவேசுவே, மற்றுமுள்ள இரு மொழி மாணவர்கள் அனைவருக்கும் இவ் அதீத திறமைகள் உண்டு!
முகம்மது: வண்ணாத்திப் பூச்சி (ஆங்கிலத்தில்/அறபியில்)பாப்லோ: வண்ணாத்திப் பூச்சி (ஆங்கிலத்தில்/எசுப்பானியத்தில்) சுவேசுவே: வண்ணாத்திப் பூச்சி (ஆங்கிலத்தில்/சீனத்தில்)
மற்ற எல்லா மனிதப் பிறவிகளினதும் மூளையைப் போன்றே அவர்களின் மூளைகளும் இரு மொழித் தன்மையனவாக அமைந்துள்ளன. 
இரு மொழிப் புலமை ஓர் அண்மைய கருதுகோளன்று, அது உண்மையில் ஒரு பண்டைக் காலத்தது. உலக சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோர் குறைந்த பட்சம் இரு மொழிகளைப் பேசுகின்றனர். உலகெங்கிலும் 7000 மொழிகள் பேசப்படுகின்றன. இதன் பொருள் சராசரியாக ஒரு நாட்டுக்கு 36 மொழிகள் வீதம் பேசப்படுகின்றன என்பதாகும்.
பன்மொழிப் புலமை ஒரு சாதாரண விடயம், அது ஒரு விதிவிலக்கல்ல! 
இரு மொழிப் புலமையுடன் வளர்வது ஒரு நீண்ட கால முதலீடாகும்! பாப்லோ, முகம்மது, சுவேசுவே ஆகியோர் போன்ற சிறுவர்கள் அதீத திறமைகளையும் பயனுள்ள விளைவுகளையும் தமது வாழ் நாள் முழுவதும் அனுபவிப்பர். 

     




கடைசியாக மாற்றப்பட்டது: Monday, 10 June 2019, 11:42 AM