3a - Discover the language inputs of bilingual children!


இருமொழிப் பிள்ளைகளின் மொழி உள்ளீடுகளைக் கண்டறியுங்கள்!

ஆங்கிலமும் அறபும் பேசும் முகம்மது, சீனமும் பிரெஞ்சும் பேசும் சுவேசுவே, எசுப்பானியமும் ஆங்கிலமும் பேசும் பாப்லோ ஆகிய அனைவரும் இருமொழிப் பிள்ளைகளே. அவர்களுக்கு அவர்களின் மொழிக் கற்கையை மேம்படுத்த உதவுவதற்காக, அவர்கள் செவிமடுக்கவும் பேசவும் செய்யும் மொழியின் உள்ளீட்டின் அளவிலும் தரத்திலும் கவனஞ் செலுத்துவது முக்கியம். சிறுவர்கள் இரு மொழிகளில் பல்வேறு உள்ளீடுகளுக்கு அடிக்கடி முகங் கொடுத்தால், இது ஒரு அளப்பரிய வேறுபாட்டைத் தோற்றுவிக்கும்! ஆனால் மொழி உள்ளீட்டின் மூலங்கள் யாவை?

மொழி உள்ளீட்டின் முதலாவது மூலம் குடும்பம்.

வழமையாக இயன்மொழி உள்ளீட்டின் பிரதான மூலம் பெற்றோர்களே.

தாய் (எசுப்பானியத்தில்): உங்களது நாள் எப்படியிருந்தது?

பாப்லோ (ஆங்கிலத்தில்): மிக நல்லது, அம்மா!

பொதுவாக முதலாம் இரண்டாம் மொழி அடைவுகளுக்காக, சகோதர சகோதரிகளும் மொழிக்கு முகங் கொடுப்பதன் ஒரு முக்கியமான மூலமாகின்றனர். அவர்கள் சில வேளைகளில் குடும்ப உறுப்பினர்களால் பயன்படுத்தப்படும் மொழியை மாற்றலாம் என்பது சுவாரசியமானது, உதாரணமாக அவர்கள் வீட்டில் தமது இரண்டாம் மொழியைப் பேசத் தொடங்கினால்.

பாப்லோவின் சகோதரன் (ஆங்கிலத்தில்): விளையாடப் போவோம்.

மொழி உள்ளீட்டின் இரண்டாவது மூலம் ஆசிரியர்கள்.

இரண்டாம் மொழிக் கற்கையில் பாடசாலைகள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன. ஆசிரியர்கள் அதிகமாகப் பேசும் போது, பிள்ளைகள் அதிகமான சொற்களைக் கற்கின்றனர்! ஆயினும், விசேடமாக பிள்ளைகள் இள வயதினராக இருக்கும் போது (4-5 வயது), ஆசிரியர்கள் நீண்ட, சிக்கலான வாக்கியங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அதே வேளை, மொழியைக் கற்றுக் கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பிள்ளைகளுடன் அவர்கள் உரையாடும் முறையை அவர்கள் அளவுக்கதிகம் எளிதாக்கக் கூடாது.

ஆசிரியர்: எல்லாம் தெளிவா?

மொழி உள்ளீட்டின் மூன்றாவது மூலம் சகபாடிகள்.

ஆசிரியர்களுடன் ஒப்பிடுகையில், ஓர் இரண்டாம் மொழியில் புதிய சொற்களைக் கற்றுக் கொள்வதில் சகபாடிகள் இன்னும் உதவிகரமாகின்றனரென ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

அன்றூ (ஆங்கிலத்தில்): இது ஒரு பந்து.

பாப்லோ: B.a.l.l.

மொழி உள்ளீட்டின் நான்காம் மூலம் பிள்ளையின் சொந்த மொழித் தயாரிப்பிலிருந்து வருகிறது.

பாப்லோ (ஆங்கிலத்தில்): எனது பெயர் பாப்லோ.

பாப்லோ (எசுப்பானியத்தில்): எனது பெயர் பாப்லோ.

நீங்களே பேசுவதைக் கேட்பது மொழி அனுபவத்தின் ஒரு தனித்துவமான வகையாவதுடன், சிறுவர்கள் பேசும் போது அது மக்களை அவர்களிடம் இன்னும் பேசத் தூண்டுகிறது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், இருமொழிச் சிறுவர்களின் மொழித் தயாரிப்பு அவர்கள் வெளிப்படும் உள்ளீட்டின் அளவில் தாக்கஞ் செலுத்தலாம். உதாரணமாக, பாப்லோ தனது பெற்றோருடன் எசுப்பானிய மொழியில் பேசுவதில் அதிக நேரத்தைச் செலவழித்தால், அவன் பிரதியுத்தரமாக அதிகம் எசுப்பானிய மொழியையே பெறும் சாத்தியமுள்ளது.

பாப்லோ (எசுப்பானியத்தில்): இன்று நான் 8 மணிக்குப் பாடசாலைக்குப் போனேன்.

பெற்றோர் (எசுப்பானியத்தில்): மிக நல்லது!

ஆயினும், பாப்லோ தனது பெற்றோருடன் அரைவாசி நேரம் ஆங்கிலத்திலும் அடுத்த அரைவாசி நேரம் எசுப்பானியத்திலும் பேசினால், அப்போது அவனது பெற்றோர் அவனுடன் எசுப்பானியத்திலும் ஆங்கிலத்திலும் ஒரு சமமான அளவில் அவனுடன் உரையாடுவர்.

பாப்லோ (எசுப்பானியத்தில்): நான் மகிழ்கிறேன்.

பாப்லோ (ஆங்கிலத்தில்): நான் ஓர் எட்டு எடுத்துக் கொள்கிறேன்.

தாய் (எசுப்பானியத்தில்): மிக நல்லது.

தந்தை (ஆங்கிலத்தில்): நாம் மகிழ்கிறோம்!

ஒன்று திரட்டிப் பார்த்தால் முகம்மது, சுவேசுவே, பாப்லோ ஆகியோர் போன்ற இருமொழிச் சிறுவர்கள் ஒவ்வொரு நாளும் இரு மொழிகளில் மொழி உள்ளீட்டுக்கு வெளிப்படுகின்றனர். இம்மொழி உள்ளீடு பல்வேறு மூலங்களிலிருந்து வருகிறது, அவற்றில் முக்கியமானவை அவர்களின் குடும்பங்கள், ஆசிரியர்கள், சகபாடிகள், அவரவரே ஆகியோராவர். அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற, இருமொழிச் சிறுவர்கள் ஏராளமான வெவ்வேறு மொழி மூலங்களுக்கும் இரு மொழிகளின் ஒரு நல்ல சமனிலைக்கும் வெளிப்பட வேண்டும்.

கடைசியாக மாற்றப்பட்டது: Sunday, 9 June 2019, 3:33 PM