8 - அற்றுப் போய் விடுவது டைனோசர்கள் மட்டுமல்ல! பல்வேறு மொழிகள் காணாமற் போய் விடுதை நாம் எப்படித் தடுக்கலாம்?
அற்றுப் போய் விடுவது டைனோசர்கள் மட்டுமல்ல! பல்வேறு மொழிகள் காணாமற் போய் விடுதை நாம் எப்படித் தடுக்கலாம்?
மைக்கேல் இத்தாலியில் பிறந்தான். அவனது பெற்றோர் பிலிப்பீனிலிருந்து வந்தவர்கள், ஒருவருக்கொருவர் தகாலோகு மொழியில் பேசிக் கொள்கின்றனர், அவனுக்கு ஏனைய சிறுவர்களுடன் இருக்கும் சிரமங்களைத் தவிர்க்க அவர்கள் அவனுடன் இத்தாலி மொழியில் மாத்திரம் உரையாடத் தீர்மானித்தனர்.
மைக்கேலின் தாய் (தகாலோகில்): மைக்கேல் இப்போதுதான் வந்துள்ளான்
மைக்கேலின் தந்தை (தகாலோகில்): மிக நல்லது!
மைக்கேலின் தந்தை (இத்தாலி மொழியில்): வீட்டுக்கு வரவேற்கிறோம்!
மைக்கேலின் தாய் (இத்தாலி மொழியில்): பாடசாலை எப்படி இருந்தது?
மைக்கேலுக்கு தகாலோகு விளங்குகிறது, ஆனால் அவனால் அதில் பேச முடியவில்லை.
மைக்கேலின் தாய் (தகாலோகில்): உங்களுக்கு இன்னும் உண்ண வேண்டுமா?
மைக்கேலின் தந்தை: ஆம், இன்னும் கொஞ்சம்
மைக்கேல் (இத்தாலி மொழியில்): எனக்கும் தான்!
சில வேளைகளில், மிகவும் வேறுபட்ட காரணங்களுக்காக சில மொழிகள் ஒதுக்கப்படுவதுடன் பெற்றோர் அவற்றைத் தமது பிள்ளைகளுக்கு வழங்காதிருக்கத் தீர்மானிக்கின்றனர்[a1] . இச்செயன்முறை, நீண்ட பெரிய அளவில், எமது பூமியின் மொழிப் பல்வகைமையை அச்சுறுத்தலாம்.
(பல்வேறு மொழிகளில்): ஹாய்.
உலகில் 7,000 இற்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
ஆகவும் பரவலான மொழிகள் மாண்டரின் சீனம், இந்தி-உருது, ஆங்கிலம், எசுப்பானியம், அறபு என்பனவாகும்.
உலகின் மிகப் பெரும்பாலான மொழிகளைப் பேசுவோர் வெகு சிலரே!
சீனம் 902 மில்லியன்,
இந்தி-உருது 457 மில்லியன்,
ஆங்கிலம் 384 மில்லியன்,
எசுப்பானியம் 366 மில்லியன்,
அறபு: 254 மில்லியன்,
தகாலோகு: 23 மில்லியன்
திர்பால்: 28 பேர்
உலக சனத்தொகையின் 4% ஆனோர் உலக மொழிகளில் 60% ஐப் பேசுகின்றனர்!
பல மொழிகள் காணாமற் போகும் இடர்ப்பாட்டில் இருக்கின்றன. விலங்குகளையும் தாவரங்களையும் போன்றே, ஒரு மொழி திடீரென்று அழியாமல் படிப்படியாக அழிந்து போகிறது.
அது பயன்படுத்தப்படும் சந்தர்ப்ப சூழ் நிலைகளின் எண்ணிக்கை குறைகிறது: உதாரணமாக, ஒரு மொழி முதலில் வீட்டிலும் பாடசாலையிலும் பயன்படுத்தப்படுகிறது, பின்னர் வீட்டில் மாத்திரம் பயன்படுத்தப்படுகிறது.
அல்லது பேசுவோரின் தொகை வேறு வகையில் குறைகிறது: காலப் போக்கில் ஒரு மொழி அதற்கு மேலும் சிறுவர்களுக்குக் கற்பிக்கப்படாமற் போகிறது, அவர்கள் அதை விளங்கிக் கொண்டாலும் அதில் பேச முடியாதோராகின்றனர்.
அல்லது அரசியற் காரணங்களுக்காக: தென்னமெரிக்காவிலும் ஆபிரிக்காவிலும் குடியேற்றவாதக் காலப் பகுதி அல்லது ஐரோப்பிய நாடுகளின் உருவாக்கம் போன்ற சில வரலாற்றுக் காலப் பகுதிகளில் பல மொழிகள் கைவிடப்பட்ட அதே வேளை ஆங்கிலமும் எசுப்பானியமும் திணிக்கப்பட்டன. ஓர் அமெரிக்க இந்திய மொழியான கிலல்லம்* தற்போது அழிந்து போன ஒரு மொழியாகக் கருதப்படுகிறது.
கிலல்லம் பெண் (கிலல்லம் மொழியில்): உலகம்
கிலல்லம் ஆண் (கிலல்லம் மொழியில்): சந்திரன்
கிலல்லம் பெண் (ஆங்கிலத்தில்): உலகம்
கிலல்லம் ஆண் (ஆங்கிலத்தில்): சந்திரன்
எல்லா மொழிகளும் அவற்றைப் பேசும் மக்களின் தொடர்பாடலுக்கும் அவர்களின் கலாசாரத்தை விளங்கிக் கொள்வதற்குமான பெறுமதியான கருவிகளாகும். கிறீன்லாந்திய மொழி பேசும் அகா வட துருவத்தில் வசிக்கிறாள், தனது மொழியில் பனியைக் குறிக்கும் பல சொற்களை அறிந்திருக்கிறாள். உதாரணமாக, "கனிபலாட்" என்றால் விழுகின்ற மென்மையான பனி, "அப்புசினிக்" என்றால் ஒரு பனிச் சேர்வு. பெரும்பாலான ஏனைய மொழிகளில், ஒரேயொரு சொல் மாத்திரமே இருக்கிறது!
அகா (கிறீன்லாந்திய மொழியில்): மென்மையான பனி
அகா (கிறீன்லாந்திய மொழியில்): பனிச் சேர்வு
நாம் தாவரங்களையும் சூழற்றொகுதிகளையும் விலங்கினங்களையும் பாதுகாப்பதைப் போன்று உலகிலுள்ள எல்லா மொழிகளையும் நாம் எப்படிப் பேணிப் பாதுகாக்கலாம்?
எல்லாவற்றுக்கும் முதலில், நாம் அறிந்த எல்லா மொழிகளையும் பேச்சு வழக்குகளையும் எமது பிள்ளைகளுடனும் பேரப் பிள்ளைகளுடனும் பேசி அவர்களுக்குக் கடத்துதல்.
மைக்கேலின் தாய் (தகாலோகில்): பாடசாலை எப்படி இருந்தது?
மைக்கேல் (தகாலோகில்): எனக்கு பாடசாலையில் ஒரு சிறந்த நாள் இருந்தது
மைக்கேலின் ஆசிரியர் (இத்தாலி மொழியில்): நன்றி
மைக்கேலின் தந்தை (தகாலோகில்): ஹாய்!
இரண்டாவதாக, நாம் அறிந்துள்ள எல்லா மொழிகளிலும் பேசுவதுடன் ஒவ்வொரு மொழிக்கும் ஓர் இடத்தை, ஒரு நேரத்தை, பொருத்தமான நிலைமையைப் பேணுதல்.
இரு ஒருமொழிப் பெற்றோருக்குப் பிறந்த ஒரு பிள்ளை அடுத்த மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம். அதிகமாக மொழிகளைக் கற்பது உலகில் இன்னும் வளமான ஓர் அனுபவத்தைத் தருகிறது: பேசுவதற்கு அதிகமான சொற்கள், உரையாடவும் செவிமடுக்கவும் அதிகமான ஆட்கள்.
பவுல்: ‘என்னால் எனது இந்திய நண்பருடன் உரையாடலாம்!’
மாரீ: ‘எனக்கு அறபு விளங்குகிறது’
அந்திரெயாஸ்: ‘நான் சீனம் கற்கிறேன்’
மைக்கேலால் தகாலோகு பேச முடியுமானால் நல்லது, இத்தாலி மொழியுடன், ஆங்கிலத்துடன் கூட! இவ்வழியில் மைக்கேல் தனது மொழிகளையும் உலகின் மொழிப் பல்வகைமையையும் பாதுகாக்கவும் உதவலாம்!
மைக்கேல்: நான் தகாலோகு, ஆங்கிலம், இத்தாலியம் என்பவற்றைப் பேசுகிறேன்