3b - Tips to give your bilingual child the best language input!

உங்களது இருமொழிப் பிள்ளைக்கு அதிசிறந்த மொழி உள்ளீட்டை வழங்குவதற்கான குறிப்புக்கள்! ஆங்கிலமும் அறபும் பேசும் முகம்மது, எசுப்பானியமும் ஆங்கிலமும் பேசும் பாப்லோ ஆகியோர் போன்ற இருமொழிச் சிறுவர்கள் தமது இரு மொழிகளையும் குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சகபாடிகள், புத்தகங்கள் போன்ற வெவ்வேறு மொழி உள்ளீட்டு மூலங்களுக்கு வெளிப்படுவதன் மூலம் கற்கின்றனர். ஆனால் நீங்கள் இருமொழிச் சிறுவர்களை அதிசிறந்த மொழி உள்ளீட்டுக்கு எவ்வாறு வெளிப்படுத்தலாம்? முதலாவது குறிப்பு முகம்மது போன்ற சிறுவர்களுடன் ஆங்கிலம், அறபு ஆகிய இரண்டிலும் முடிந்தளவு அதிகமாக, குறிப்பாக அன்றாடம்... அத்துடன் அவனது வாழ்வின் முதல் நாளிலிருந்தே பேச வேண்டும் என்பதாகும். தாய்: என் மகனே! பாட்டன்: வருக! சில வேளைகளில், முகம்மது போன்ற இருமொழிச் சிறுவர்கள் தாம் வீட்டில் பேசும் மொழி தாம் பாடசாலையில் பேசும் மொழியினளவு முக்கியமானதல்ல என்று நினைக்கலாம்; அவர்கள் தமது வீட்டு மொழியை தமது வீட்டுக்கு வெளியில் பேச வெட்கப்படவும் கூடும். முகம்மது (ஆங்கிலத்தில்): இது எனது ஓவியம். இரண்டாவது குறிப்பு ஆசிரியர்களும் பெற்றோரும் அறபு கற்கவும் பேசவும் முகம்மதைத் தூண்டுவதுடன் அவனும் அவனது வகுப்புத் தோழர்களும் எம்மொழியும் மற்றொரு மொழியை விடச் சிறந்ததல்ல என உணரச் செய்வதாகும். ஆசிரியர்: அதை அறபியில் முன் வை முகம்மது (அறபியில்): இது எனது ஓவியம்! ஆசிரியர்: உனது வகுப்புத் தோழர்கள் சற்று அறபு கற்க வேண்டும். ஆசிரியர்கள் பெற்றோரை அவர்களின் பிள்ளைகளுடன் அவர்களின் வீட்டு மொழியில் பேசுமாறு தூண்டுவதுடன் பெரும்பான்மையோரின் மொழியை அவர்கள் பாடசாலையில் கற்றுக் கொள்வர் என்பதால் அதில் அவர்களுடன் பேச வேண்டிய எத்தேவையும் கிடையாதெனச் சுட்டிக் காட்ட வேண்டும். ஆசிரியர்: பெற்றோர் தமது பிள்ளைகளுடன் அறபியில் பேச வேண்டும். முகம்மதின் தாய்: நன்றி! தமது பிள்ளைகளுடன் உரையாடும் போது அவர்களின் முதலாம் மொழியைப் பயன்படுத்துவதன் மூலம், பெற்றோர் அவர்களை ஓர் இயல்பான உச்சரிப்புடன் பல்வேறு அர்த்தங்களையும் உணர்வுககளையும் வெளிப்படுத்தி தரமான உள்ளீட்டுக்கு வெளிப்படுத்துகின்றனர். மூன்றாவது குறிப்பு இரு மொழிகளிலும் வாசிக்குமாறு பாப்லோவைத் தூண்டுவதுடன் அவனுக்கு கதைகளை வாசித்துக் காட்டுவதாகும். பாப்லோ எசுப்பானிய மொழியில் வாசிக்கக் கற்றுக் கொண்டால், அவன் எசுப்பானிய மொழியைச் சிறப்பாகப் பேசுவான்... அவ்வாறு அது மாறியும் நடக்கும்! ஆங்கிலத்தைப் பொறுத்த வரையிலும் ஏனைய எல்லா மொழிகளைப் பொறுத்த வரையிலும் கூட இதுவே உண்மை. நான்காவது குறிப்பு பாப்லோவை வெவ்வேறு பேசுவோருக்கும் மொழி மூலங்களுக்கும் (புத்தகங்கள், நகைச்சுவைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்...) வெளிப்படுத்துவதாகும். மாறுபட்ட உள்ளீடுகள் அவனது மொழி விருத்திக்கு மிக முக்கியமானவை ஆகும். முகம்மதின் தாய் முகம்மதுடன் அறபியில் பேசுவதும் முகம்மதை அவனது இரண்டாம் மொழியில் அதனை இயல்பாகப் பேசுவோருடன் பேச விடுவதும் எப்போதும் அதிசிறந்ததாகும். முகம்மதின் தாய் (அறபியில்): வீட்டுக்குப் போவோம்! முகம்மது (அறபியில்): சரி! மொழிக் கற்கையில் இயல்பல்லாத உள்ளீடு இயல்பான உள்ளீட்டினளவுக்கு நல்லதல்ல. எனினும், முகம்மது தனது தாய் சில வேளைகளில் அறபு அல்லாத ஒரு மொழியில் பேசுவதைக் கேட்டால், அது அவனது மொழிக் கற்கைக்குப் பிரச்சினையாகாது. முகம்மதின் தாய் (ஆங்கிலத்தில்): உனக்கு ஒரு ஐஸ்கிறீம் வேண்டுமா? முகம்மது (ஆங்கிலத்தில்): நிச்சயமாக! முடிவாக, இரகசியம் என்னவென்றால் முகம்மதையும் பாப்லோவையும் அடிக்கடி இரு மொழிகளுக்கும் ஒரு நல்ல சம அளவில் வெளிப்படுத்துவதாகும். வித்தியாசமான (பெரும்பாலும் இயல்பான!) மொழிக்காரர்களுடனும் வித்தியாசமான சந்தர்ப்ப சூழ் நிலைகளிலும் வழங்கும் மாறுபட்ட மொழி அனுபவம் அதிசிறந்த பெறுபேறுகளை வழங்குகிறது. சிறுவர்கள் எல்லா மொழிகளுக்கும் ஊக்குவிக்கப்படுகின்ற சூழல்களில் வளர்வதும் முக்கியமாகும்; சிறுவர்கள் அவற்றின் அழகையும் பொருளிலும் ஓசையிலும் உள்ள வளத்தையும் கண்டு கொள்ளும் போது அவற்றைக் கற்கத் தூண்டப்படுகின்றனர்.

கடைசியாக மாற்றப்பட்டது: Tuesday, 23 July 2019, 6:38 PM