5 - உலகம் நியாயமானதா? நீதிக்காக ஈடுபாடு கொள்ளுங்கள்!

கடந்த தசாப்தங்களில், உலகம் ஒரு வேகமான முறையில் மாற்றமடைந்து வந்துள்ளது. அண்மைக் காலம் வரை, உங்களுக்கு உலகின் மறு பக்கத்திலுள்ள ஒரு நண்பருடன் தொடர்பாட வேண்டுமாயின், நீங்கள் ஒரு கடிதத்தை அனுப்புவீர்கள், அது போய்ச் சேர வாரக் கணக்கில் எடுக்கலாம்! 

இப்போது அது வித்தியாசம். உலகெங்கிலுமுள்ள ஆட்கள் ஒருவருக்கொருவர் மிக எளிதாகத் தொடர்பு படுகின்றனர். நீங்கள் ஈக்குவடோரிலிருந்து வந்த ஒரு வாழைப் பழத்தை உண்டு உங்களது நாளைத் தொடங்கலாம், உலகின் மறு பக்கத்திலுள்ள ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டு நாளை முடிக்கலாம்: நீங்கள் ஐரோப்பாவில் வாழ்ந்தால், உங்களது நண்பர் அவுஸ்திரேலியாவில் இருக்கக் கூடும்! இது எமது வாழ்வில் ஒரு மகத்தான மாற்றம்: உலகெங்கிலும் கூடுதலான தகவல்கள், கூடுதலான தொடர்பாடல், கூடுதலான பரிமாற்றங்கள். இதை நாம் ‘ஒன்றிலொன்று தங்கியிருத்தல்’ என்கிறோம்.” 

ஒன்றிலொன்று தங்கியிருப்பதன் காரணமாக, உலகின் பிரச்சினைகள் தீர்க்கப்பட இன்னும் கடினமாகின்றன. நாம் யாவரும் ஒருவருடனொருவர் தொடர்பாயிருப்பதால், உலகின் ஒரு பகுதி வளங்களில் (உணவு, கார்களுக்கான எண்ணெய் போன்றன) பெரும் பகுதியைப் பாவித்தால், உலகின் மறு பகுதி போதியளவைக் கொண்டிராது. வறுமையும் சமத்துவமின்மைகளும் உள்ளூர்ப் பிரச்சினைகள் மாத்திரமன்றி உலகளாவிய பிரச்சினைகளாகின்றன, அவற்றை ஒன்று சேர்ந்து ஒத்துழைத்துத் தீர்க்க வேண்டியிருக்கின்றது.

தற்போது, உலகின் ஆகப் பணக்கார நாடுகளில் 30 மில்லியன் சிறுவர்கள் வறுமையில் வளர்கின்றனர். அவர்களின் பெற்றோரிடம் உணவு, ஆடைகள், வீட்டு வசதி, விளையாட்டுப் பொருட்கள், பாடசாலை உபகரணங்கள் என்பவற்றுக்குப் போதிய பணம் இல்லாதிருக்கக் கூடும்.

ஏ, அது நியாயமல்ல! நாம் நிலைமையை மாற்ற வேண்டும்! தீவிர சமத்துவமின்மைகளையும் வறுமையையும் முடிவிக்க, புதிய செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. நாமனைவரும் அன்றாடச் செயற்பாடுகளில் வித்தியாசமாக வாழலாம். நாம் வறுமைக்கும் சமத்துவமின்மைக்கும் மேலாக, கண்ணியத்தையும் சமத்துவத்தையும் தெரிவு செய்ய வேண்டும்.

சிலர் சமூகங்களுக்கும் குடும்பங்களுக்கும் சிறுவர்களுக்கும் உலகை ஒரு சிறந்த இடமாக்க ஏற்கனவே செயற்படத் தொடங்கியுள்ளனர்! 193 நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்களைக் கொண்ட ஒரு சர்வதேச நிறுவனமான ஐக்கிய நாடுகள் சபை 2030 ஆகையில் ஒரு சிறந்த உலகை உருவாக்க 17 குறிக்கோள்கள் தொடர்பில் இணங்கியுள்ளது. 

10 ஆம் குறிக்கோள் சமத்துவமின்மையைக் குறைப்பதில் விசேடமாகக் கவனஞ் செலுத்தவதுடன் உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணியமான வாழ்வு கிடைக்கப் பெற வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. இது ஒரு மனித உரிமை, அஃதாவது ஒவ்வொருவருக்கும் உள்ள ஓர் உரிமையாகும். அத்தகைய உரிமைகள் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் எழுதப்பட்டுள்ளன, அது 500 இற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அது 1948 ஆம் ஆண்டு அதற்கு ஆதரவாக 48 நாடுகள் வாக்களித்த ஒரு சர்வதேசச் சட்டம். தற்காலத்தில், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திலுள்ள கோட்பாடுகள் 90 இற்கும் மேற்பட்ட நாடுகளின் சட்டங்களில் உள் வாங்கப்பட்டுள்ளன.

இப்போது ஒன்று சேர்ந்து செயற்படுவதும் எல்லாருக்குமாக ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதும் அரசாங்கங்கள், பாடசாலைகள், சமுதாயங்கள் என எம்மனைவரையும் பொறுத்தது. நாமனைவரும் 2030 ஆகையில் உலகளாவிய இலக்குகளை அடைந்து கொள்வதை உறுதி செய்ய உதவலாம்.

ஆனால், சிறுவர்களும் பாடசாலைகளும் என்ன செய்யலாம்? பாடசாலைகள் இவ்வாறு ஒரு சிறந்ததும் இன்னும் நீதியானதுமான ஓர் உலகை அடைந்து கொள்ள உதவலாம்:

படிமுறை 1. வறுமையினதும் சமத்துவமின்மையினதும் காரணங்களைப் பற்றி இன்னும் கற்கத் தொடங்குதல்.

படிமுறை 2. உங்களது பாடசாலையிலும் பரந்து பட்ட சமுதாயத்திலுமுள்ள பிரச்சினைகளை அடையாளங் காண்பதும் அவற்றுக்கான தீர்வுகளைத் தேட ஒன்றாகச் செயற்படுவதும். உதாரணமாக, நீங்கள் உங்களது பாடசாலை மாவட்டத்தில் வறுமையைப் பற்றி ஒரு வகுப்பறை விவாதத்தை நடத்தலாம். 

படிமுறை 3. உங்களிலிருந்து வேறுபட்ட ஆட்களிடம், உதாரணமாக வெவ்வேறு இடங்களில் வாழும் அல்லது வெவ்வேறு வயதினரான ஆட்களிடம், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளல். நீங்கள் ஏனையோருடன் சேர்ந்தியங்கும் போது, வேறுபட்ட கருத்துக்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். 

படிமுறை 4. உங்களது பாடசாலையிலும் சமுதாயத்திலுமுள்ள அநீதியான நிலைமைகளை மாற்றச் செயற்படத் தொடங்குங்கள்! 

நீங்கள் அவர்களது சொந்த மொழிகளில் அடையாளங்களை வைப்பது போன்று புதிதாக வந்து சேர்ந்த மாணாக்கரை இன்னும் வரவேற்பதாக உங்களது பாடசாலையை ஆக்கும் வழிகளைப் பரிந்துரைக்கலாம். 

அனைவருக்கும் சிறப்பான நீதியும் சமத்துவமும் மனித உரிமைகளும் கொண்ட ஓர் உலகை உருவாக்குவதில் அனைவரும் பங்கு பற்றலாம்.

கடைசியாக மாற்றப்பட்டது: Monday, 27 May 2019, 10:59 AM