7a - பாடசாலையில் பன்மொழித் தன்மை தனி மொழித் தன்மையை விடச் சிறந்தது!#1 பாடசாலையில் உபாயங்கள்: மொழிக் கலப்பு
புலம் பெயர்ந்து வரும் நாடுகள் இன்னுமின்னும் பல்கலாசார, பன்மொழித் தன்மையனவாகின்றன. எல்லா மொழிகளும் ஒரே தொழிற்பாட்டைக் கொண்டுள்ள போதிலும் நாடுகளின் உத்தியோகபூர்வ மொழிகள், ஆங்கிலம் போன்ற சர்வதேச மொழிகள் என்பன போன்று சில மொழிகள் ஏனையவற்றைச் சிறந்தனவும் இன்னும் பயனுள்ளவையும் ஆகும்.
புலம் பெயர்ந்த பெற்றோரைக் கொண்டுள்ள பிள்ளைகள் உத்தியோகபூர்வ மொழியும் வீட்டில் பேசப்படும் மொழிகளும் தொடர்பில், தமது வீட்டில் பேசப்படும் மொழி பெரும்பான்மையினரின் மொழியைப் போன்று முக்கியமானதல்ல என்று உணர்ந்து வெட்கித்து நிற்பதால் அவர்களின் உணர்வுகளில் இது ஒரு தாக்கத்தைக் கொண்டுள்ளது.
மைக்கேல்: தகாலோகு முக்கியமில்லை.
அமடௌ: வொலொப் ஆங்கிலத்தைப் போன்று சுவாரசியமானதல்ல.
பாத்திமா: அறபு பயனற்றது.
சிறுவர்கள் தமது வீட்டு மொழியைக் கற்கவும் பேசவும் மறுத்தால், பெற்றோர் ஊக்கங் கெட்டு தமது பிள்ளைகளுடன் தமது சொந்த மொழியில் பேசாதிருக்கத் தீர்மானிக்கக்கூடும்.
அமடௌ: நான் ஆங்கிலம் மட்டுமே பேசுவேன்.
அமடௌவின் தாய்: ஆங்கிலம் மட்டும் பேசுவோம்.
பாத்திமாவின் தந்தை: நல்ல யோசனை!
அனாவின் தாய்: நல்ல யோசனை!
வீட்டில் தமது சொந்த மொழியைப் பயன்படுத்துவது தமது பிள்ளைகளுக்கு பாடசாலையில் பேசப்படும் உத்தியோகபூர்வ மொழியைக் கற்பதை இன்னும் கடினமாக்குகிறதென சில வேளைகளில் பெற்றோர்கள் நினைக்கின்றனர்.
பாடசாலையும் ஆசிரியர்களும் வீட்டு மொழிகளைப் பற்றிக் கொண்டுள்ள மனப்பான்மை தீர்க்கமானது. புலம் பெயர்ந்த சிறுவர்கள் உத்தியோகபூர்வ மொழியை போதியளவு விரைவாகக் கற்க மாட்டார்களென்று சில வேளைகளில் ஆசிரியர்கள் கவலைப்படுகின்றனர்.
ஆசிரியர்: அவர்கள் விரைவில் கற்பார்களா?
புலம் பெயர்ந்த சிறுவர்கள் ஒருவருக்கொருவர் தமது வீட்டு மொழியில் பேசிக் கொண்டால் ஏனைய சிறுவர்கள் தனித்து விடப்படுவதாகவும் அவர்கள் கவலைப்படக்கூடும்.
ஆசிரியர்: எல்லாரும் உள்ளடக்கப்படுகின்றனரா?
இக்காரணங்களுக்காக, சில ஆசிரியர்கள் பாடசாலையில் பெரும்பான்மை மொழியில் மாத்திரம் பேசுமாறு மாணவர்களிடம் கூறக் கூடும்.
ஆசிரியர்: “பாடசாலையில் உங்கள் வீட்டு மொழியைப் பேச வேண்டாம்!”
உத்தியோகபூர்வ மொழியைக் கற்க ஊக்குவிப்பது முக்கியமானதாக இருந்தாலும், எல்லா மொழிகளும் முக்கியமானவை என்பது வலுவாக எடுத்துக் காட்டப்பட வேண்டும்.
ஆசிரியர்கள்: உங்களுக்குத் தெரிந்த எல்லா மொழிகளும் அழகானவையும் முக்கியமானவையுமாகும், அவற்றைக் கற்றுக் கொள்வதை ஒருபோதும் கைவிடாதீர்கள்!
பாடசாலை எல்லா மொழிகளையும் ஆர்வமாக ஊக்குவிக்கா விட்டால், மாணவர்கள் பாடசாலையில் பேசப்படும் மொழி தமது வீட்டு மொழியை விட அதிகமாக முக்கியமானதென நம்பலாம்.
மைக்கேல்: ஆங்கிலம் அதிகமாக முக்கியமானது.
ஆசிரியர்கள் மொழிக் கலப்பு, மொழி விழிப்புணர்வு என்பன போன்ற அணுகு முறைகளைப் பயன்படுத்தி பன்மொழித் தன்மையை ஊக்குவிக்கலாம்.
மொழிக் கலப்பு என்பது மாணவர்களை வகுப்பில் வெவ்வேறு மொழிகளைப் பயன்படுத்தத் தூண்டும் ஒரு கற்பித்தல் அணுகு முறையாகும்.
ஆசிரியர்: நீங்கள் இக்கவிதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குக் கூறுங்கள்.
ஆசிரியர், மாணவர் ஆகிய இருவரும் ஒரே மொழிகளை அறிந்திருக்கும் போது இது அதிசிறப்பாகச் செயற்படுகிறது; இவ்விடயத்தில், ஒரு தலைப்பைப் பற்றி ஒரு மொழியில் கலந்துரையாடி மற்றொரு மொழியில் அதைப் பற்றி எழுதுமாறு மாணவர்களிடம் கேட்கலாம்.
ஆசிரியர்: ஒரு கவிதையை எழுத முயலுங்கள்: உங்களுக்கு விருப்பமான மொழியைப் பயன்படுத்துங்கள்!
ஒரேயொரு மொழியை மாத்திரம் பேசக்கூடிய ஆசிரியர்களும் கூட மொழிக் கலப்பைப் பயன்படுத்தலாம்; இவ்விடயத்தில், அவர்கள் சேர்ந்து கற்பவர்களாவதுடன் அவர்களால் அம்மொழியைப் பேச முடியா விட்டாலும் வகுப்பில் தமது வீட்டு மொழியைப் பயன்படுத்துமாறு மாணவர்களைத் தூண்டுகின்றனர்.
ஆசிரியர்: ஒவ்வொருவரும் அவரவரது மொழியைப் பேசலாம்.
இவ்வழியில், மாணவர்கள் பெரும்பான்மை மொழியைச் சார்ந்திருக்கத் தேவையில்லாமல், அவர்களிடமுள்ள எம்மொழிக் கருவிகளின் மூலமும் தமது எண்ணங்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.