7b - பாடசாலையில் உபாயங்கள்: மொழி விழிப்புணர்வு
மொழி விழிப்புணர்வு என்பது பாடசாலையில் பன்மொழித் தன்மையை ஊக்குவிக்கும் நோக்கிலான மற்றுமொரு கற்பித்தல் அணுகுமுறை ஆகும். அது மாணாக்கருக்குத் தெரிந்த எல்லா மொழிகளையும் உள்ளடக்குகிறது: அவர்களின் இயல்பான/வீட்டு மொழிகள், பாடசாலையிற் கற்பிக்கப்படும் வெளிநாட்டு மொழிகள், (மொழி வழக்குகள் போன்று) பிரதேசத்தில் பேசப்படும் ஏனைய மொழிகள், (சைகை மொழி அல்லது பிறெய்லி போன்று) உடல் மொழியும் ஏனைய தொடர்பாடல் முறைகளும். இதன் பொருள் ஆசிரியர்கள் இம்மொழிகள் யாவையும் அறிந்திருக்கவும் கற்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்பதன்று!
மொழி விழிப்புணர்வு எல்லா மொழிகளுக்கும் ஒரே பெறுமதியுள்ளது எனும் உண்மையை எடுத்துக் காட்டுகிறது.
சுவேசுவே: எனக்கு ஆங்கிலமும் சீனமும் பேச முடியும்.
பாத்திமா: எனக்கு அறபும் பிரெஞ்சும் பேச முடியும்.
மாரீ: எனக்கு பிரெஞ்சு மாத்திரம் பேச முடியும்.
மொழிகளில் ஒன்றில் சிறுவர்களின் திறமைகள் மட்டுப்பாடாக இருந்த போதிலும், வெவ்வேறு மொழிகளில் தொடர்பாட முடியுமாக இருப்பது இக்காலத்தில் ஒரு பெரும் பயனைக் கொண்டிருக்கிறது. மற்றொரு மொழியில் எதையேனும் விளங்க, பேச, வாசிக்க அல்லது எழுத இயலுமாவது இன்னும் பயனுள்ளதாகும்.
மொழி விழிப்புணர்வுச் செயற்பாடுகளுக்கான தொடக்கப் புள்ளி மாணவரின் மொழிப் பாவனையாகும், அஃதாவது ஒவ்வொரு மாணவராலும் பேசப்படும் மொழிகளாகும், அவை சிந்தனைக்கும் கற்றலுக்கும் ஓர் அவதானமாகின்றன.
மொழி விழிப்புணர்வை ஊக்குவிக்க, ஆசிரியர்கள் செய்யக் கூடியன:
மாணவர்களால் பேசப்படும் வெவ்வேறு மொழிகளைப் பற்றி திறந்த மனப்பான்மையுடன் பேசுதல்;
ஆசிரியர்: வெவ்வேறு மொழிகள் முக்கியமானவை.
2. வெவ்வேறு மொழிகளைப் பற்றிச் சிந்திக்கவும் ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிய அவற்றை ஒப்பிடவும் சிறுவர்களைத் தூண்டுதல்;
ஆசிரியர்: பிரெஞ்சுக்கும் அறபுக்கும் இடையிலான வேறுபாடுகள் யாவை?
3. எல்லா மொழிகளையும் பற்றி நேரிய உளப்பாங்கைத் தூண்டுதல்;
ஆசிரியர்: சீனம் மிகச் சுவாரசியமானது.
4. நாம் மொழிகளைப் பயன்படுத்தவும் கற்கவும் செய்யும் வழிகளைப் பற்றிச் சிந்திக்குமாறு மாணவர்களிடம் கூறுதல்.
ஆசிரியர்: நீங்கள் எப்போது பிரெஞ்சு பேசுகிறீர்கள்?
ஆசிரியர்கள் வகுப்பில் மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளில் உள்ளடங்கக்கூடியன:
வெவ்வேறு மொழிகளிலுள்ள ஒலிப்பதிவுகளைச் செவிமடுத்தல்,
2. வெவ்வேறு மொழிகளில் தமது திறமைகளைப் பற்றிப் பேசுமாறு மாணவர்களிடம் கூறுதல்
3. மாணவர்களை அவர்களின் மொழிப் பாவனைகளைப் பற்றி ஒருவரிடமொருவர் கேட்டறியச் செய்தல்.
மாணவர்களால் பேசப்படும் எல்லா மொழிகளும் அவற்றை ஒரு மரபு வழியில் கற்பிக்க வேண்டிய தேவையிராமல் பாடத்திட்டத்தில் உள் வாங்குவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். உதாரணமாக, வெவ்வேறு மொழிகளிலுள்ள சைகைகளும் அறிவித்தல்களும் பாடசாலைச் சூழலில் காட்சிப்படுத்தப்படலாம், (புத்தகங்கள் போன்ற) வளங்கள் வெவ்வேறு மொழிகளில் கிடைக்கச் செய்யப்படலாம்.
சிறுவர் குழு: பாடசாலையில் நாம் எமது வீட்டு மொழியைப் பேசவும் வித்தியாசமான மொழிகள் பலவற்றைக் கற்கவும் செய்யலாம்!
அந்திரெயாஸ்: எனது பாடசாலை பன்மொழியினது என்பதால் நான் மகிழ்வடைகிறேன்!
மொழிக் கலப்பு, மொழி விழிப்புணர்வு என்பன போன்ற கற்பித்தல் அணுகு முறைகள் வீட்டில் வேறு மொழிகளைப் பேசும் மாணவர்களை பாடசாலையில் வரவேற்கப்படுவதாகவும், இம்மொழிகளில் தமது திறமைகளைப் பற்றிப் பேசும் போது வசதியாகவும் உணரச் செய்கின்றன. பன்மொழித் தன்மையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளிற் கலந்து கொள்வதன் மூலம், ஒரு மொழியை மாத்திரம் பேசும் மாணவர்களை வெவ்வேறு மொழிகளையும் கலாசாரங்களையும் பற்றி அதிகமாகக் கற்பது மாத்திரமன்றி ஒரு பன்மொழிச் சமூகத்தில் வாழ்வதைப் பற்றிய விழிப்புணர்வையும் வேற்று மொழிகளில் ஓர் ஆர்வத்தையும் பெறுகின்றனர்.