4 - இரண்டாம் மொழிக் கற்கையின் 4 படிமுறைகள்


எகிப்திலிருந்து வந்த யாஸ்மின் தற்போதுதான் ஜெர்மனியை வந்தடைந்துள்ளாள். இப்போது அவள் ஜெர்மனிய மொழியைக் கற்க வேண்டும்.

ஓர் இரண்டாம் மொழியைக் கற்கும் எல்லாச் சிறுவர்களையும் போன்றே, யாஸ்மின் 4 பிரதான மொழிப் படிமுறைகளினூடாகச் செல்வாள்.

முதலாம் மொழிப் படிமுறை “வீட்டு மொழிப் பாவனை” ஆகும். முதலில், யாஸ்மின் தன்னைச் சூழவுள்ள ஆட்களால் அதைப் பேச இயலாவிடினும் அறபியில் பேச முயலக்கூடும்.

யாஸ்மின்: ஹாய்! (அறபியில்)


ஏனையோருக்கு அவள் சொல்வதை விளங்கிக் கொள்ள முடியாதென அவள் விரைவிலேயே புரிந்து கொள்வதால் இப்படிமுறை நீடித்து நிற்காது.

இரண்டாம் மொழிப் படிமுறை மௌனக் காலம். பின்னர் யாஸ்மின் மௌனக் காலத்துக்குச் செல்வதுடன் அவள் இன்னமும் ஜெர்மனிய மொழியை விளங்கிக் கொள்ள முயல்வதால் பேசுவதில்லை. அவள் சைகைகளைப் பயன்படுத்தி அந்திரெயாஸுடன் தொடர்பாட முயல்கிறாள்.

அந்திரெயாஸ்: உனக்கு சிறிது நீர் வேண்டுமா? (ஜெர்மனிய மொழியில்)

உட்டே: உனக்கு என்னுடன் விளையாட வேண்டுமா? (ஜெர்மனிய மொழியில்)


யாஸ்மின் தானே ஜெர்மனிய மொழியைப் பயிற்சி செய்ய முயலக் கூடும், ஆனால் அவள் அந்திரெயாஸுடனும் ஏனையோருடனும் தொடர்பாட அதனைப் பயன்படுத்த மாட்டாள். யாஸ்மின் ஒரு நெடுங் காலத்துக்குப் பேசாதிருப்பது எம்மைக் கவலைப்படுத்தக் கூடாது: அவளாகவே அதைப் பயன்படுத்த இயலுமாக முன்னர் புதிய மொழியை அறிந்து கொள்ள அவளுக்குக் காலம் தேவை.

கிறிஸ்டியன்: நீ எங்கிருந்து வருகிறாய்? (ஜெர்மன் மொழியில்)


மௌனக் காலம் வழமையாக 2 முதல் 6 மாதங்கள் வரை நீடிக்கிறது.

மூன்றாம் படிமுறை தொலைவரைவுப் பேச்சுப் படிமுறை ஆகும். இக்கட்டத்தில் யாஸ்மின் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்பது போன்ற சுருக்கமான தயார் நிலையிலுள்ள வசனங்களைப் பயன்படுத்துகிறாள்.

யாஸ்மின்: பிறந்த நாள் வாழ்த்துக்கள்! (ஜெர்மனிய மொழியில்)

அந்திரெயாஸ்: நன்றி! (ஜெர்மனிய மொழியில்)


இறுதியில், யாஸ்மினால் அந்திரெயாஸுடனும் அவளது வகுப்புத் தோழர்களுடனும் ஆசிரியர்களுடனும் ஊடாட முடிகின்றமையால், இரண்டாம் மொழிக் கற்கையில் இது ஒரு முக்கியமான படிமுறையாகும்.

கடைசிப் படிமுறை மொழி கலத்தல் எனப்படுகிறது. யாஸ்மினால் தற்போது ஜெர்மனிய மொழியில் தொடர்பாட முடியும்; அவள் இன்னமும் ஏராளமாகப் பிழை விடுகிறாள், ஆனால் இறுதியாக இவை மறைந்து விடும்.

யாஸ்மின்: எனக்கு இன்னும் நீர்? (ஜெர்மனிய மொழியில்)


நாமனைவரும் அறிந்துள்ளவாறே ஒரு மொழியைக் கற்பதற்கு காலமும் முயற்சியும் தேவைப்படுகின்றன: ஏனையோருடன் நன்றாகத் தொடர்பாட இயலுமாவதற்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை அம்மொழியைப் பேசுவோருக்கு செவிமடுக்க வேண்டும்

...அத்துடன் பாடசாலையில் கடினமான கோட்பாடுகளைக் கற்க வழி செய்யும் ஒரு மொழி மட்டத்தை அடைய 5 முதல் 7 ஆண்டுகள் வரை எடுக்கும்.

யாஸ்மின்: விளையாடுவோம்! (ஜெர்மனிய மொழியில்)

அந்திரெயாஸ்: நல்ல யோசனை (ஜெர்மனிய மொழியில்)

கிறிஸ்டியன்: அது கேளிக்கையானது! (ஜெர்மனிய மொழியில்)


பொறுமையாக இருங்கள், கவலைப்பட வேண்டாம்: சிறுவர்கள் ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வதில் மிகச் சிறந்தவர்கள்!

சிறுவர்கள் தமது இரண்டாம் மொழியில் ஏனையோருடன் எளிதாகத் தொடர்பாக முடியுமான ஒரு படித்தரத்தை அடைந்து கொண்ட போதிலும், அவர்களுக்கு நெடுங்காலம் தொடர்ச்சியாக உதவுங்கள், அப்போது அவர்கள் எல்லாப் பாடங்களையும் கற்கத் தேவையான மொழித் திறமைகளைப் பெறுவார்கள்.

கிறிஸ்டியன்: நீ மிக நன்று. (ஜெர்மனிய மொழியில்)

யாஸ்மினின் தந்தை: அப்படியே தொடர், அது மிக நல்லது! (அறபியில்)

யாஸ்மினின் தாய்: நாம் உன்னைப் பற்றிப் பெருமையடைகிறோம்! (அறபியில்)

கடைசியாக மாற்றப்பட்டது: Sunday, 9 June 2019, 3:39 PM