9 - அடுத்த கண்ணாடிகளால் உலகைப் பார்த்தல்! கலாசாரத் தப்பெண்ணத்தை விளங்கிக் கொள்ளும் முறை
அடுத்த கண்ணாடிகளால் உலகைப் பார்த்தல்! கலாசாரத் தப்பெண்ணத்தை விளங்கிக் கொள்ளும் முறை.
1. இத்தாலியில் ஒரு பெரிய நகரிலுள்ள ஒரு முன்பள்ளி ஆசிரியையான அன்னா தனது பாடசாலையில் பல்வேறு கலாசாரப் பின்னணிகள் காணப்படுகின்றன எனும் விடயத்தை நேசிக்கிறாள்.
அன்னா: நான் எனது வகுப்பை நேசிக்கிறேன்!
ஆனால் சில வேளைகளில் அவளுக்கு சில நடத்தைகள் தொடர்பில் எதைச் சிந்திப்பது, எவ்வாறு சமாளிப்பது என்பது தெரியவில்லை… .
2. ஒரு நைஜீரியத் தாயான அமீனா வழமையாக தனது குழந்தையான லத்தீபாவை காலையில் மிகவும் சுணங்கியே அழைத்துச் செல்கிறாள்.
அன்னா: மிகவும் சுணங்கி விட்டது!
தனது சகாக்களுடன் பேசும் போது, அமீனா ஒரு சிறந்த தாய் என்றும் ஆனால் அவள் தனது குழந்தையின் தேவைகளையும் பாடசாலையின் நேரசூசியையும், விசேடமாக காலையில் சுற்று நேரத்தை போதியளவு மதிப்பதில்லை என்றும் அன்னா கூறுகிறாள்.
அன்னா: அவள் கணக்கெடுக்கிறாளா?
3. ஆனால் அடுத்த பக்கத்திலிருந்து விடயங்களைப் பார்க்க முயல்வோம்!
அமீனாவுக்கு ஒருபோதும் ஒரு முன்பள்ளி அனுபவம் இருந்ததில்லை. அவள் ஒரு நாட்டுப் புறக் கிராமத்திலேயே வளர்ந்தாள், அங்கு சிறுவர்கள் வீட்டில் தங்கியிருந்தனர் அல்லது ஒன்று சேர்ந்து பாதையில் விளையாடினர்: இறுக்கமான நேரசூசி கிடையாது, சுற்று நேரம் கிடையாது!
4. நுழைவு நேரம் தொடர்பிலும் சுற்று நேரம் தொடர்பிலும் அதிக கவனஞ் செலுத்துமாறு அன்னாவிடம் கேட்கப்பட்ட போது, அமீனாவுக்கு விளங்கவில்லை, ஆனால் அவள் கேள்வி கேட்கத் துணியவில்லை. அவளது நாட்டில், ஓர் ஆசிரியரிடம் கேள்வி கேட்பது மரியாதையானதல்ல.
அன்னா: சரியான நேரத்துக்கு வர முயலுங்கள்
அமீனா (சிந்திக்கிறாள்): அவள் என்னை மோசமென நினைக்கிறாளா?
5. இரண்டு ஐந்து வயது இரட்டையரின் பிரேசிலியத் தாயான எலியன் சிறுவர்கள் பாடசாலையில் சற்று எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டுள்ளனரா என்று கேட்ட போதும் அன்னா ஆச்சரியப்பட்டாள்.
எலியன்: நீங்கள் எப்போது எழுத வாசிக்கக் கற்பிக்கிறீர்கள்?
கேள்வி பொருத்தமற்றதென அன்னா கண்டு கொண்டாள்: அவை ஆரம்பப் பாடசாலையின் நடவடிக்கைகள்.
அன்னா: இது ஓர் ஆரம்பப் பாடசாலையல்ல!
6. ஆனால் அவளது பக்கத்திலிருந்து விடயங்களைப் பார்க்க முயல்வோம்!
அவள் குழந்தைப் பருவத்தில் பிரேசிலில் இருந்த போது, எலியன் முன்பள்ளியில் சற்று எழுத வாசிக்கக் கற்பதை அனுபவித்தாள், அவளது தாய் அவளைப் பற்றிப் பெருமிதமடைந்தாள்:
எலியனின் தாய்: வாவ்! மிகச் சரி!
7. தமது குழந்தைகள் இத்தாலியச் சிறுவர்களைப் போன்று வேகமாக இத்தாலிய மொழியைக் கற்க மாட்டார்கள் என்றும் அவளால் அவர்களுக்கு உதவ முடியாமற் போகும் என்றும் கூட எலியன் கவலைப்படுகிறாள்.
இத்தாலியத் தாய் தனது குழந்தைக்கு: என்னுடன் சேர்ந்து மீண்டும் பாடத்தைப் படி!
எலியன் (சிந்திக்கிறாள்): எனக்கு இத்தாலிய மொழி நன்கு தெரியாவிட்டால் நான் எப்படி எனது குழந்தைகளுக்கு உதவலாம்?
8. அன்னா, அமீனா, எலியன் ஆகிய யாவரும் சிறுவர்களுக்கு அதிசிறந்ததைச் செய்ய விரும்புகின்றனர், ஆனால் சில வேளைகளில் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதில்லை.
அவர்களது வித்தியாசமான கலாசாரப் பின்னணிகளையும் வாழ்க்கை அனுபவத்தையும் பற்றி அறியாமல் சேர்ந்து செயற்படும் ஆட்களின் நடவடிக்கை தவறான பொருள் கோடல்களுக்கு வழி கோலலாம்.
9. கலாசாரம் என்பது ஒரு பனிப் பாறையைப் போன்றது.
மேற்பரப்பு மட்டத்தில், ஒருவர் மக்கள் என்ன செய்கிறார்கள், உண்கிறார்கள், உடுக்கிறார்கள், தயாரிக்கிறார்கள் என்பவற்றைப் பார்க்கலாம்.
ஆழமான மட்டம் மக்கள் தாம் செய்பவற்றை ஏன் செய்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது: விழுமியங்கள், நம்பிக்கைகள், மனப்பாங்குகள்...
நாம் அதனூடாக உலகைப் பார்க்கும் எமது சுய நினைவற்ற கண்ணாடிகள் என்றும் கலாசாரத்தைக் கருதலாம்....
நீங்கள் ஒருவரை வித்தியாசமான ‘கலாசாரக் கண்ணாடிகளால்’ பார்க்கும் போது
நீங்களும் அவற்றின் ஒரு சோடியை அணிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணரக்கூடும்!
10. அமீனாவும் எலியனும் அவளைப் போன்று அதே விடயங்களைப் பார்க்கவும் எண்ணவும் செய்வதில்லை என்று அன்னா உணரக்கூடும், உண்மையும் அஃதே!
அன்னா: சுற்று நேரம் என்றால் என்னவென்று நான் உங்களுக்குக் கூற முயல்கிறேன்
அமீனா: நன்றி! நான் கேட்கத் துணியவில்லை!
11. அன்னா விளங்கிக் கொள்ள நேரமெடுத்தால், அவள் நினைப்பதை வெளிப்படையாகக் கூற முயன்றால்,
அவர்களிடமும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக் கொண்டால், அவர்கள் ஒவ்வொருவரதும் கண்ணோட்டங்களை விளங்கிக் கொண்டு பேசத் தொடங்கலாம்.
அன்னா: நீங்கள் ஏன் மொழியைப் பற்றிய சில கவலைகளைக் கொண்டிருக்கிறீர்களென நான் இப்போது பார்க்கிறேன், நான் அதிக கவனஞ் செலுத்துவேன்!
நாமனைவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளலாம், சில கலாசாரக் கண்ணாடிகள் எமது கலாசாரத்துக்கு புதிய சுவாரசியமான வண்ணங்களைச் சேர்க்கலாம் என்பதைக் கண்டு கொள்ளலாம்!
12. சிறுவர்களைப் பொறுத்த வரையிலும் கூட இது உண்மையானதே.
அவர்கள் தமது பெற்றோரிடமிருந்து கற்கும் வித்தியாசமான விடயங்களையும் பொதுவான விடயங்களையும் பகிர்ந்து கொண்டு மனத்தளவில் இன்னும் நெகிழ்வாக வளரலாம்!
ஸாரா: எனது தாய் வலது கையால் மாத்திரம் உண்ணுமாறு எனக்குக் கூறுகிறாள்;
அலிஸ்: எனது தாய் முட்கரண்டியையும் கத்தியையும் மாத்திரம் பயன்படுத்தக் கூறுகிறாள்!
போஹ்: நான் உண்குச்சிகளை மாத்திரமே பயன்படுத்துகிறேன்!
எல்லாரும் சேர்ந்து: எங்களுடைய தாய்மார் நாம் உணவை வீணாக்குவதை விரும்புவதில்லை!”