10 - الحياة الأسرية مع أكثر من لغة واحدة
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளுடன் குடும்ப வாழ்வு
எச்சேயும் மெகுமத்தும் இங்கிலாந்தில் பிறந்தனர், அவர்கள் துருக்கியில் பிறந்தோரான தமது தாயுடனும் தந்தையுடனும் பாட்டியுடனும் வசிக்கின்றனர்.
தந்தை (துருக்கி மொழியில்): பாடசாலை நாள் எப்படி இருந்தது?
மெகுமெத்து (ஆங்கிலத்தில்): நல்லது
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளுடன் வாழ்வது பன்மொழிக் குடும்பங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். அது குடும்ப உறுப்பினர்களை இன்னும் தொடர்பானோராக உணரச் செய்யலாம்.
எச்சேயும் மெகுமெத்தும் ஆங்கிலமும் துருக்கியும் பேசுவதுடன், அவர்களால் எளிதாக தமது பெற்றோருடனும் பாட்டன் பாட்டியுடனும் பாடசாலையில் தமது நண்பர்களுடனும் பேச முடிகிறது.
எச்சே (துருக்கி மொழியில்): பாட்டி, எங்களுக்கு ஒரு கதை சொல்லுங்கள்
பாட்டி (துருக்கி மொழியில்): எனக்கு நல்ல ஞாபகம் ...
ஆங்கிலத்தில் பேசுவது அவர்களுக்கு அவர்களின் பாடசாலை வாழ்க்கையைச் சரிக்கட்டிக் கொள்ளவும் பாடசாலையில் கற்கவும் உதவி செய்வதால் அவர்கள் அதில் பேசிக் களிப்படைகின்றனர். அவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் போது அவர்கள் துருக்கி மொழியில் பேசிக் களிப்படைகின்றனர்.
மெகுமெத்து: விளையாடுவோம்
குடும்பங்களைப் பொறுத்த வரையில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளுடன் வாழ்வதும் தந்திரமானதாக இருக்கலாம். பெற்றோர் தாம் வீட்டில் பயன்படுத்த விரும்பும் மொழியைப் பற்றிய எண்ணங்களைக் கொண்டிருப்பர், ஆனால் சிறுவர்களுக்கு வித்தியாசமான எண்ணங்கள் இருக்கலாம். இது மனவழுத்தங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் இட்டுச் செல்லலாம்.
தந்தை (துருக்கி மொழியில்): நீ இதை எப்படித் துருக்கி மொழியில் சொல்வாய்?’
எச்சே (ஆங்கிலத்தில்): ‘எனக்கு துருக்கி மொழியில் பேச விருப்பமில்லை!’
பெற்றோரும் பிள்ளைகளும் அவர்கள் பேசும் மொழியைப் பற்றி வித்தியாசமான உணர்வுகளைக் கொண்டிருக்கக்கூடும். உதாரணமாக, எச்சேயினதும் மெகுமெத்தினதும் தாய் துருக்கி மொழி தனது உள்ளத்தில் இருப்பதாகவும் அவள் சிந்திக்கும் மொழி அதுவென்றும், ஆங்கிலம் அவள் மிக்க முயற்சி செய்யும் மொழி என்றும் கூறுகிறாள். அவள் இதை ஒரு சுமையாக உணர்கிறாள், அவர்களின் பாட்டி ஆங்கிலம் கற்பதை நினைத்துப் பார்ப்பதுமில்லை. மாறாக, எச்சேயும் மெகுமெத்தும் ஆங்கிலம் அவர்களது வாழ்வின் எதிர்காலம் என்றும் துருக்கியம் அவர்களின் கடந்த காலம் என்றும் உணர்கின்றனர். சில வேளைகளில், அவர்கள் வீட்டிலும் கூட ஆங்கிலத்தில் பேச விரும்புகின்றனர்.
தாய்: துருக்கியம் எனது உள்ளத்தில் உள்ளது. நான் ஒவ்வொரு நாளும் ஆங்கிலம் கற்க முயல்கிறேன்.
எச்சே: ஆங்கிலம் என் எதிர்காலம். துருக்கியம் என் கடந்த காலம்.
பல குடும்பங்கள் வீட்டில் இந்நிலைமைகளுக்கு முகங் கொடுக்கின்றன.
சில வேளைகளில், உங்களுக்கு உங்களது மரபு வழி மொழியைக் கைவிடுவது எளிதாகத் தோன்றலாம்.
தாய்: நான் கைவிடுகிறேன்.
ஆயினும், உங்களது பிள்ளைகளுக்கு குடும்பத் தொடர்புக்கு அப்பால் வேறு பல நன்மைகள் இருக்கின்றன.
பெற்றோருக்கு வீட்டில் வசதியானதும் பொருத்தமானதுமான மொழிகளை அவர்கள் கேட்கும் போது, அது பிள்ளைகளின் மொழி விருத்திக்கு உதவுகிறது.
எச்சே: நான் விரைவாகக் கற்கிறேன்!
நீங்கள் உங்களது பிள்ளையுடன் உங்களுக்கு அதிக வசதியானதென உணரும் மொழியில் தொடர்பாடல் செய்தால், நீங்கள் உங்களை சிறப்பாகவும் இன்னும் வளமான சொல் வளத்துடனும் வெளிப்படுத்துவீர்கள்.
எச்சேயின் பாட்டி: என்னால் என்னை வெளிப்படுத்த முடிகிறது.
உங்களது பிள்ளை வளரும் போது, அவர் தமது சமூக வாழ்விலும் தமது வேலை வாழ்விலும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைத் தெரிந்திருப்பதைப் பாராட்டலாம்.
எச்சே: நன்றி! என்னால் வெவ்வேறு ஆட்களுடன் உரையாடலாம்!
எச்சேயின் தாய்: நீ எப்போதும் எங்களுடன் தொடர்பில் இருக்கிறாய்!
ஒரு நாள், குடும்ப மொழியை அறியாதிருப்பது பெற்றோரிடமிருந்தும், நெடுங் காலம் செல்லும் போது பிள்ளைகளிடமிருந்தும் விடுபட்டுப் போனதாக உணரப்படலாம்.
நீங்கள் வீட்டில் உங்களது மொழிகளை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதிலுள்ள சமனிலை காலப் போக்கில் மாற்றமடையலாம், அப்போது மீண்டும் சரிக்கட்டிக் கொள்வது அவசியம்.