2 - ஐ விடச் சிறந்தவை. இரு மொழிச் சிறுவர்களின் இரு மொழிகள் ஒருவருக்கொருவர் தாக்கஞ் செலுத்துவது எவ்வாறு

இரு மொழிகள் ஒரு #2 ஐ விடச் சிறந்தவை. இரு மொழிச் சிறுவர்களின் இரு மொழிகள் ஒருவருக்கொருவர் தாக்கஞ் செலுத்துவது எவ்வாறு

 

எல்லாச் சிறுவர்களும் எவ்வாறு பேசுவதென சிறிது சிறிதாக, ஒரே மாதிரியான ஒரு வழியில் கற்றுக் கொள்கின்றனர். ஆயினும், இரு மொழிச் சிறுவர்கள் ஒரே நேரத்தில் இரு மொழிகளைக் கற்க வேண்டியுள்ளது. 

மாரீ: அம்மா (பிரெஞ்சில்)

அகுமது: அம்மா (பிரெஞ்சில்). அம்மா (அறபியில்)

மெய்: அம்மா (பிரெஞ்சில்). அம்மா (சீனத்தில்)


அவர்களின் மூளைகளில், அவர்களின் இரு மொழிகளும் முற்றிலும் வெவ்வேறானவையல்ல, ஆனால் அவர்கள் ஒருவருடனொருவர் ஊடாடுகின்றனர். இரு மொழிப் புலமையுள்ள சிறுவர்களின் இரு மொழிகளுக்கிடையில் 5 பிரதான ஊடாட்ட வகைகள் காணப்படுகின்றன. 

முதலாவது வகை குறி மாற்றம் எனப்படுகிறது.

ஒருவர் ஒரு மொழியில் ஒரு வாக்கியத்தைக் கூறி அதை மற்றொரு மொழியில் ஒரு வாக்கியத்துடன் தொடரும் போது குறி மாற்றம் நிகழ்கிறது. அகுமதிடம் ஒரு மொழியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டு, அவன் மற்றொரு மொழியில் பதிலளிக்கும் போதும் அது நிகழ்கிறது.

 

அகுமது: பிறந்த நாள் வாழ்த்துக்கள்! (பிரெஞ்சில்) வாழ்த்துக்கள்!(அறபியில்)  உனக்கு அப்பரிசு விருப்பமா? (பிரெஞ்சில்)

 நூர்: ஆம்! (பிரெஞ்சில்)

அகுமது: மிக நல்லது! (அறபியில்)

 

மொழிகளுக்கிடையிலான இரண்டாவது ஊடாட்டம் குறிக் கலப்பு எனப்படுகிறது. லியாங் பிரெஞ்சில் பேசும் போது சீனத்தில் தனித் தனிச் சொற்களைச் சேர்க்கும் போது குறிக் கலப்பு நிகழ்கிறது. 

இரு மொழிப் புலமையுள்ள சிறுவர்கள் இரு மொழிகளைக் கலப்பது என்ற விடயம் அவர்கள் குழம்பிப் போயுள்ளனர் என்று பொருளாவதில்லை.

வோ: எனக்கு (பிரெஞ்சில்) ஓர் அப்பிள் (சீனத்தில்) தர முடியுமா?

வோவின் தாய்: ஆம் (சீனத்தில்), நிச்சயமாக! (பிரெஞ்சில்)


மூன்றாவது வகை, ஒரு மொழி மற்றொரு மொழியில் தாக்கஞ் செலுத்துவது தாமதம் எனப்படுகிறது. பிரெஞ்சில் மாத்திரம் பேசும் மாரீயுடன் ஒப்பிடுகையில் அகுமதுக்கு அவனது இரு மொழிகளையும் கற்க கூடிய நேரம் தேவைப்படுகிறது. உண்மையில், அகுமது மாரீயை விடக் குறைவான பிரெஞ்சுச் சொற்களையே அறிவான். ஆயினும், நாம் அகுமது அறபியிலும் பிரெஞ்சிலும் அறிந்துள்ள வார்த்தைகளைச் சேர்த்துக் கருதினால், அவனுக்கு மாரீயை விட அதிக வார்த்தைகள் தெரியும்!

மாரீ: ஆம், தாய், தந்தை, அப்பிள் (பிரெஞ்சில்)

அகுமது: ஆம், தாய் (பிரெஞ்சில்), தந்தை, அப்பிள், வீடு (அறபியில்).. 

 

4 ஆவது ஊடாட்டம் ஆர்முடுகல் எனப்படுகிறது. இரு மொழிப் புலமையுள்ள சிறுவர்களின் மொழிக் கற்கை அவர்களையொத்த ஒரு மொழியினரை விட வேகமானது. உதாரணமாக, வோ சீன எழுத்துக்களில் எழுதப்பட்ட ஆக்கங்களையும் பிரெஞ்சு எழுத்துக்களில் எழுதப்பட்ட ஆக்கங்களையும் பார்ப்பது வழமை என்பதால், அவள் மாரீயை விட அதிகமாக வாசிக்கும் முறையைக் கற்கத் தயாராகிறாள்.

 

இறுதியான தாக்கஞ் செலுத்தல் வகை இடமாற்றம் எனப்படுகிறது. இரு மொழிப் புலமையுள்ள சிறுவர்கள் ஒரு மொழிக்குச் சாதாரணமான கூறுகளை மற்ற மொழிக்கு இடமாற்றக் கூடும். சில சந்தர்ப்பங்களில், இது தவறுகளுக்கு வழி செய்யலாம். உதாரணமாக, பாப்லோ சில வேளைகளில் “அவள்” என்பதற்குப் பதிலாக “அவன்” என்று சொல்லக்கூடும், ஏனென்றால், எசுப்பானியத்தில் அவன் பொதுவாக எழுவாயைப் பேச வேண்டியது கிடையாது.

பாப்லோ: “அவள் விநோதமாக இருக்கிறார்”.

 

வேறு சந்தர்ப்பங்களில், இடமாற்றம் நேரிய பெறுபேறுகளைக் கொண்டிருக்கலாம். எடுத்துக் காட்டாக, எசுப்பானியத்தில் வாசிக்க முடியுமாவது பாப்லோவுக்கு ஆங்கிலத்தில் சிறப்பாக வாசிக்க உதவலாம்! சுருக்கமாகக் கூறினால், இரு மொழிப் புலமையுள்ள சிறுவர்களின் இரு மொழிகளும் ஒன்றுடனொன்று ஊடாடுகின்றன. இது பெரும்பாலும் சிறப்படையவே, ஆயினும் சில வேளைகளில் தவறுகள் நிகழலாம். ஆனாலும் கவலைப்பட வேண்டாம்: இத்தவறுகள் சாதாரணமானவை, காலஞ் செல்லச் செல்ல அவை எளிதில் மறைந்து விடும்!

ஆசிரியர்கள்: கவலைப்பட வேண்டாம்!

கடைசியாக மாற்றப்பட்டது: Thursday, 6 June 2019, 11:31 PM